Wednesday, August 3, 2011

arika iyarpiyal

அறிக இயற்பியல்


எரிகல்லும் விண்கலனும்


விண் வெளியிலிருந்து எரிகல் பூமியின் வளி மண்டலத்தை
ஊடுருவும் போது உராய்வின் காரணமாகப் பெருமளவு
வெப்பத்தைப் பெறுகிறது. இதனால் அது வளி
மண்டலத்தைக் கடக்கும் பொழுதே எரிந்து சாம்பலாகி
விடுகிறது. வளி மண்டலம் மட்டும் இல்லாது போனால்
இந்த விண் கற்கள் அங்குமிங்குமாகப் பூமியில் விழும்.
அவற்றின் இயக்க வேகம் மிக அதிகமாக இருப்பதால்
சிறிய கல் கூட பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.
எரிகல் போல வளி மண்டலத்தை ஊடுருவும் ஏவூர்தி
மற்றும் விண் கலன்கள் எரிந்து போய்விடுவதில்லையே
ஏன்?
                                    *******************
 
எரிகல் பூமியால் ஈர்க்கப்பட்டு வளி மண்டலத்தை
வேகமாக ஊடுருவும் போது ,உராய்வின் காரணமாக
அதன் வெப்பநிலை உயருகிறது. இதற்கு அதன்
புறப்பரப்பு பெற்றிருக்கும் கரடு முரடான பரப்பும்
காரணமாகும். எரி கல்லின் உயர் வெப்பம் தாங்கும்
தன்மை வரம்பிற்கு உட்பட்டிருப்பதால் அது எரிந்து
சாம்பலாகி விடுகிறது. ஆனால் ஏவூர்தி மற்றும்
விண்கலங்களில் மென்பரப்பினால் உராய்வு பெருமளவு தவிர்க்கப்படுவதுடன் ,உயர் வெப்பம் தாங்க வல்ல பூச்சுகளையும் ,பொருட்களையும் பயன்படுத்துவதினால்
எரிகல் போல அவை எரிந்து போவதில்லை .

No comments:

Post a Comment