Monday, August 1, 2011

vinveliyil ulaa

அறிக இயற்பியல்


பால்வெளியில் சூரியன்

            


பேரண்டத்தில் இருக்கும் பத்தாயிரம் கோடி அண்டங்களுள்
ஒன்று பால்வெளி மண்டலம் (Milky way ).ஒவ்வொரு
அண்டத்திலும் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன.
 பால் வெளி மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்மீன் நமது
சூரியன். பால் வெளி மண்டலம் ஒரு குவி வில்லை போல
ஏறக்குறைய தட்டையான வடிவத்தில் இருக்கிறது. இதன்
நீளம் சுமார் 90,000 ஒளி ஆண்டுகள்.நமது சூரியன்
அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இருக்கிறது. அண்டத்தின் தடிப்பு மையத்தில்
16000 ஒளி ஆண்டுகள், ஆனால் சூரியன் இருக்குமிடத்தில்
தடிப்பு 3000 ஒளி ஆண்டுகள்.பால் வெளி யில் சூரியனின்
அமைவிடத்தை எப்படிக் கண்டறிகின்றர்கள்?
                            *********************

சூரியன் பால் வெளி மண்டலத்தின் மையத் தளத்திற்கு
மிக நெருக்கமாக இருக்கிறது. மைய- விளிம்பு
இடைவெளியின் 3 ல் 2 பங்கு தொலைவில்
சூரியன் உள்ளது. பரந்த வெளி முழுவதையும் பல கோண இடைப்பகுதிகளாக வகுத்து ப் பார்த்த போது,பால் வெளி
ஒரு முழுமையான கோண வடிவமாகக் காட்சி அளித்தது.
இது பால் வெளி மண்டலத்திலுள்ள விண்மீன்கள்
எல்லாம் பழத்தினுள் பொதிந்திருக்கும் விதைகள போல
உள்ளன என்று தெரிவித்தது. இதை ஒவ்வொரு கோண
இடைப்பகுதியிலும் உள்ள விண்மீன்களைக்

கணக்கிட்டு உறுதி செய்துள்ளனர் .கோணத்தொலைவு
அதிகரிக்க விண்மீன்களின் எண்ணிக்கை
பெருமளவு குறைகிறது. பால் வெளி மண்டலத்தின்
மைய அச்சில் விண்மீன்களின் பங்கீட்டுத்தனத்தை
அளவிட்டறிந்த போது அது சக்கிட்டாரியஸ்
(Sagittarius ) என்ற விண்மீன் கூட்டம் அமைந்துள்ள
பக்கம் செறிவு பெருமமாகவும் ,அதற்கு 180 டிகிரி
கோணத்தில் உள்ள அக்ரியா (Augriya ) விண்மீன் கூட்டம்
அமைந்துள்ள பக்கம் செறிவு சிறுமமாகவும் உள்ளது.
இது சூரியன் அண்ட மையத்திலிருந்து ஓரளவு விலகி
உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

சக்கிட்டாரியஸ் உள்ள பக்கம் சூரியனுக்கும் அண்ட
மையத்திற்கும் உள்ள பகுதியையும் ,அக்ரியா உள்ள
பக்கம் வெளிப் பகுதியையும் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment