புவி வளிமண்டலத்தின் நிறை
பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல அதன் வளி மண்டலம் உள்ளது. இதில் நைட்ரஜன் (78 .08 %),ஆக்சிஜன் (20 .95 %) ஆர்கான் ( 0 .93 %) கார்பன்டை ஆக்சைடு (0 .033 %) உள்ளது. சொற்ப அளவில் நியான்,ஹீலியம் ,மீதேன் ,கிரப்பிட்டான் ,செனான், ஹைட்ரஜன் போன்ற வளிமங்கள் உள்ளன. புவி வளிமண்ட லத்திலுள்ள காற்றின் நிறையை மட்டும் அளவிட்டறிவது எப்படி ?
புவி ஈர்ப்பு விசை வளி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு துகளையும் கவர்ந்திழுப்பதால் பூமியில் ஊர் அழுத்தம் வளிமண்டலத்தால் ஏற்படுத்தப் படுகிறது .இயல்பான சூழலில் இது ஒரு வளி மண்டல அழுத்தம் எனப்படும் .இது வெற்றிட வெளியில் வைக்கப் பட்டுள்ள 13600 கிகி /கமீ அடர்த்தியுடைய பாதரசத்தை 760 மிமீ உயரம் உயர்த்தப் போதுமானதாக இருக்கிறது. இதன் எடை 0 . 76 x 13600 x 9 .8 என்பதால் இது 1 . 013 x 10 ^௫ நியூட்டன் விசைக்குச் சமம் . ஒவ்வொரு அலகு புவி பரப்பிலும் இவ் வழுத்தம் செயல்படுவதால் மொத்த விசை புவி பரப்பு மற்றும் வளி மண்டல் அழுத்தம் இவற்றின் பெருக்கல் பலனாகும். இது வளி மண்டலக் காற்றின் எடையாகும். பூமியின் ஆரம் 6371 கிமீ எனக் கொண்டு புவி வலிமைடலக் காற்றின் நிறையை 5 .3 x 10 ^18 கிகி என மதிப்பிடலாம் . பூமியின் நிறை மாறினால் ....
பூமி சூரியனைச் சுற்றி ஒரு சிறிய நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதோடு தன்னைத் தானே சுற்றிக் கொள்ளவும் செய்கிறது. ஒரு முறை சூரியனை வளம் வர ஓராண்டு காலமும் ,ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர ஒரு நாளும் எடுத்துக் கொள்கிறது. பூமியின் நிறை இரு மடங்காக உயருமானால் இந்தக் காலங்கள் எப்படி மாறும் ?
அலை இயக்கத்தில் எப்படி ஊசலின் அலைவு நேரம் ஊசல் குண்டின் நிறையைச் சர்ந்திருப்பதில்லையோ ,அது போல வளைவியக்கத்தில் கோளின் சுற்றுக் காலம் அதன் நிறையைச் சார்ந்திருப்பதில்லை .கெப்ளரின் மூன்றாம் விதிப்படி ஒரு கோளின் வட்டப் பாதை ஆரத்தின் மும்மடி ,அதன் சுற்றுக் காலத்தின் இருமடிக்கு நேர் விகிதத் தொடர்பில் இருக்கிறது என்பதும் இவ் வுண்மையைக் கூறும். எனவே பூமியின் நிறை இரு மடங்கானாலும் அதன் சுற்றுக் காலம் அதே ஓராண்டாகவே இருக்கும்.
தற்சுழற்ச்சியில் அதன் கோண உந்தம் மாறுவதில்லை. நிறை இருமடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரத்தின் மும்மடி இரு மடங்காக அதிகரிக்கிறது. கோண உந்தம் என்பது நேர்கோட்டு உந்தத்தின் திருப்பு திறனாகும். இதன் மாறாக் கோட்பாடு கோணத் திசை வேகம் மற்றும் ஆரத்தின் இருமடி இவற்றின் பேர்கள் பலன் மாறிலி எனத் தெரிவிக்கிறது. எனவே நிறை இரு மடங்கானால் பூமியின் தற்சுழற்ச்சி இயக்க வேகம் குறையும் .அதாவது ஒரு நாள் என்பது 24 மணி என்பதைவிடக் கூடுதலான நேரமாகும்
No comments:
Post a Comment