Saturday, January 12, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 லட்சம் கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாவதாகப் பத்திரிகைகளில் வந்த செய்தி படித்து மனம் நொந்து போகாத நடுத்தர மக்கள் யாருமிருக்க முடியாது .இந்திய அரசின் மெத்தனப் போக்கிற்கு இதைவிட வேறொருகொடிய செய்தி இருக்க முடியாது.அடிக்கடி விமானங்களில் பயணித்து ஆடம்பாரமான விழாக்களில் கலந்து கொள்வது ,ஊடகங்களில் தன்னைப் பற்றிய செய்தி       மற்றும் படம் வெளிவருமாறு பார்த்துக் கொள்வது ,அப்பாவி மக்களைச் சந்தோஷப்படுத்த போலியான வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பது,குளிரூட்டப் பட்ட அறைகளில் அமர்ந்தது கொண்டு கூட்டம் போடுவது,உதவியாளர்கள் எழுதித் தந்த குறிப்புக்களை வாசிப்பது,எதிர்கட்சியினரை வசை பாடுவது,அவ்வப்போது செயலில்லா திட்டங்களை முன் மொழிவது  மொத்தத்தில் செத்த ஆடு காப்பணம் சுமை கூலி முக்காப்பணமான கதைதான்.வயதான அரசியல்வாதிகளிடம் தான் அனுபவம் இருக்கும் என்றெண்ணி அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தது ஏமாற்றம் தான் வெறும் வயதாவதாலேயே ஒருவருக்கு அனுபவம் வந்து விடுவதில்லை என்பதற்கு இந்திய அரசியல்வாதிகளே உதாரணம்.இளைஞர்களோ,முதியவர்களோ அரசியல்வாதிகளுக்கு நாட்டுப்பற்றும் நல்ல உள்ளமும் இருதால் போதும் . மனமிருந்தால் மக்களிடம் அப்படியொரு மாற்றம் வராமலா போய்விடும்

கரை தட்டிய கப்பலொன்று கடலலையால் நகர்ந்து வந்து ராமேஸ்வரத்திலுள்ள இரயில் பாலத்தில் மோதி இடித்து அழித்து வருகின்றது. அதைத் தடுத்துக் கொள்ள நம்மிடம் வல்லமையில்லையே.

 

தமிழ் நாட்டில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமை எல்லாம் வெறும் பேச்சளவில்தானா? 2020 ல் ஒரு வல்லரசாக இந்தியா விளங்கப் போகிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் நம் தகுதிப்பாட்டை அதற்கேற்ப வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

 முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய சீனாவிலிருந்து மெரினா கடற்கரைக்கு வந்த கடலாமைகள் பல இறந்து போயின. மெரினா கடற்கரை மிகவும் மோசமாக மாசுபட்டிருப்பதை இது சுட்டிக் காட்டுவதாக உள்ளது .இந்திய அரசுக்கு இடித்துரைக்க இந்த ஆமைகள் தற்கொலை செய்து கொண்டன போலும்.அரசு விழித்துக் கொள்ளாவிட்டாலும் மக்களாவது இனி விழித்துக் கொள்ளவேண்டும் .இல்லையென்றால் ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும் கதைதான் கடல் மட்டுமா மாசு பட்டிருக்கிறது .இந்திய நிலப் பரப்பும் தான் -எங்கும் குப்பையும் கழிவு நீரும் அழிந்து வரும் காடுகள் ,குறுகிவரும் விளை நிலங்கள்,இந்திய மக்களும் தான் -ஊழலும் ,தீய எண்ணங்களும் ,கெட்ட செயல்களும்

No comments:

Post a Comment