Saturday, January 19, 2013

Sonnathum Sollaathathum-11


சொன்னதும் சொல்லாததும் -11

எடிசன் ஒரு படிக்காத மேதை சுய உந்துதலின் முடுக்கத்தால் முன்னுக்கு வந்தவர் .மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு..பல நூறு கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வாங்கியவர்..இவரைப் போல திறமை உள்ளவர் உலகில் இன்னொருவர் இல்லாமற் போனதற்கு என்ன காரணம் என்று ஒரு முறையாவது சிந்திந்துப் பார்த்தல் உண்மைகள் புரியவரும். எடிசன் தொடர்ந்து செய்முறை அறிவியல் துறையில் ஈடுபட்டதால் சின்னச் சின்ன இயக்கங்களைக் கூட அனுகூலமாகிக் கொள்ளும் திறமை அவரிடம் இயல்பாகவே வளர்ந்திருந்தது .இதுவே ஒரு உந்தற்காரணியாக மாறியதால் தன் செயல்களையெல்லாம் வெகு சிறப்பாக வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது .இதற்கு ஓர் எடுத்துக்காட்டை அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் விவரிக்கலாம் .

எடிசன் அறைக்கதவு மிகவும் மிகவும் கனமாக இருந்தது .ஒரு முறை அவரைக் காண வந்த நண்பரொருவர் இது பற்றிக் கேட்டார். அதற்கு எடிசன் " என்னைக் காண ஒவ்வொரு நாளும் 50-60 பேர் வந்து போகின்றார்கள் .அப்படி வந்து செல்லும்போது அறைக் கதவைத் திறந்து மூடுகின்றார்கள் . அதனால் என் வீட்டிலுள்ள நீர்த்தொட்டியில் தண்ணீர் எக்கப்பட்டு நிரம்பி விடுகிறது" என்றார். எடிசனுடைய வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடம் .செய்யவேண்டிய கடமைகள் ,செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கும்போது அவற்றைப் புறக்கணித்து தேவையில்லாமல் வேறு வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டால் பாதி வெற்றி பெற்றமாதிரித்தான் .பணியில் கண்ணும் கருத்துமாய் இல்லாவிட்டால் அரிதாக வரும் வாய்ப்புகள் கூட நம்மைவிட்டு விலகிச் செல்லும் .பிறப்பு, இறப்பு இவற்றிற்கு இடைப்பட்ட குறுகிய வாழ்க்கையைப் பிறர்க்குப் பயனுள்ளதக்கிக் கொள்ள எதையும் எதற்காகவும் தள்ளிப் போடாமல் முடிக்க வேண்டும் .பிறர்க்குப் பயனுள்ள ,மகிழ்ச்சி தரக்கூடிய பணிகளைச் செய்யும்போதுதான் ஒருவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைகிறது .அதைத் தெவிட்டும் அளவிற்கு அனுபவித்தவர் எடிசன் .உறுதி இறுதிவரை இருந் தால் ஒருவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்பதை எடிசனின் எளிய வாழ்க்கை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

No comments:

Post a Comment