Sunday, January 6, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

இந்திய தடையில்லாமல் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஏன் சொல்கின்றீர்கள் ?

இந்தியாவில் குற்றங்கள் புற்று நோய் செல்கள் போல வளர்ந்து வருகின்றன..பல கோடி உயிர்ச் செல்களில் ஓரிரு செல்கள் மட்டும் திரிவுற்றிருந்தால் புற்று நோயின் வளர்ச்சியும் தாக்கமும் குறைவாகவே இருக்கும். அந்நிலையில் திரிவுற்ற செல்களை அகற்றி உடலின் நலனைப் பாதுகாக்க முடியும் .ஆனால் பல கோடி உயிர்ச் செல்களில் சில கோடி செல்கள் திரிவுற்றுப் போயிருந்தால் புற்று நோயின் வளர்ச்சி பெரிதும் முடுக்கப் பட்டிருக்கும் .ஒரு கட்டத்தில் உயிரை க் காக்க முடியாமல் போய்விடுகின்றது .உடலில் புற்று நோய் பரவல் எப்படியோ அப்படியே சமுதாயத்தில் குற்றங்களின் பரவலும் .தொடக்க நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து புற்று நோயிலிருந்து விடுபடலாம் .அதுபோல தொடக்க நிலையில் சிறுசிறு குற்றங்களுக்கு முறையான தண்டனை அளிப்பதின் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம் .புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் கலந்து விட்டால் அவை ஊடகத்தில் பரவிவிடுகின்றன .குற்றங்களுக்கு தண்டனை இல்லை என்றாலோ அல்லது தண்டனை இல்லாமல் தப்பி விடலாம் என்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலோ சமுதயாத்தில் குற்றங்கள் மலிந்து விடுகின்றன.குற்றங்கள் செய்வோர் சிலர் பலராவதொடு ,சிறு குற்றங்களோடு பெருங் குற்றங்களைச் செய்யவும் துணிவு பெறுகின்றனர்  

 ஈவ் -டீசிங் செய்பவனுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் கற்பழிப்புக் குற்றம் செய்யும் அளவுக்கு அவன் மாறிவிடுவான் என முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெக்கடாசலய்யா கருத்தரங்கு ஒன்றில் கூறியதையும் 2007 ல் புனே நகரில் கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்து தடுக்க வந்த பாட்டியைக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனைக் குறைப்பு என்ற செய்தியையும் இங்கு சுட்டிக்காட்டலாம் .(தினமலர் பக்கம்-11 7-1-2013)

பொதுவாக அதிகக் குற்றங்களுக்குக் காரணம் அதிகமான குடிப்பழக்கமே .குடிப்பழக்கத்தில் குற்றம் செய்வோரோடு குடிப்பழக்கத்திற்காகக் குற்றம் செய்வோரும் பெருகி வருகின்றார்கள்.மது விற்பனையால் அரசுக்கு நல்லநல்ல திட்டங்களைச் செயல்படுத்த வருவாய் கிடைக்கிறதாம்.அதனால் மது ஒழிப்பு என்பது வெறும் பகற்கனவே.

இந்தியாவில் மதுப் பழக்கம் வெறும் போதைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகின்றது. குளிர்ச்சியான நாடுகளில் வாழ்வோர் தங்கள் உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாகப் பருகுவார்கள் .குடி நீர் போல வயிறு முட்டக் குடிக்க மாட்டார்கள். மது ஒழிப்பின்றி குற்றங்களை ஒருபோதும் குறைக்க முடியாது

No comments:

Post a Comment