தத்துவம்
கடவுளைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறியிருக்கின்றார்கள்..கடவுள் இருக்கின்றார் என்றும் கடவுள் இல்லை என்றும் காரசாரமான விவாதம் இன்றும் தொடருகின்றது.,முரண்பட்ட கருத்துகளினால் கடவுளைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை யாருக்குமே இல்லை. இதில் ஆன்மீகவாதிகளும் உள்ளடங்குவர்..
மரபு வழியில் எல்லாவற்றையும் பின்பற்றி ஒழுகப் பழகிவிட்ட மனிதர்களுக்கு இயற்கையை ஒட்டி தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள்.
அதனால் ஒரு சமயம் கடவுளைப் பற்றி அவர்கள் கூறும் கருத்தும் மறுசமயம் அவர்கள் கூறும் கருத்தும் முற்றும் வேறுபட்டு இருக்கின்றன.
கடவுளைப் பற்றி ஒரு நிலையான கருத்து அவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை.
கடவுள் புரிந்துகொள்ள முடியும் என்றால் எளிமையானவர். புரிந்து கொள்ள முடியாதவர் என்றால் கடினமானவர்.இத் தன்மை நம்மைப் பொருத்துத்தான் அமைகின்றது.கடவுள் எங்குமில்லை.எங்குமிருப்பது இயற்கைதான். அதனால் இயற்கையின் அனைத்து அம்சங்களும் கடவுளின் பிரதிபலிப்புக்களே.இயற்கையே இயற்பியல் உலகில் உண்மையான பரம்பொருள்.
கடவுளுக்கு உருவமில்லை. உருவங்கொடுத்தது மனிதர்களே. கடவுளுக்கு என்ன உருவம் கொடுத்தாலும் பொருந்தும். என்பதால் கடவுள் என்பது இயற்கையே.ஆற்றலே கடவுள். எண்ணங்களின் திரள்ச்சியே அதற்கு உருவங் கொடுத்தது.ஆற்றல் திரண்டால் பொருள்.பொருள் சிதைந்தால் ஆற்றல். பொருளும் ஆற்றலும் ஒன்றைக் குறிப்பிடும் இரு வேறு நிலைகளே என்பதைப் போல கடவுளும் இயற்கையும் ஒன்றைக் குறிப்பிடும் இரு வேறு நிலைகளே. ஆற்றல் இயற்கையைப் போல எல்லையற்றது. பொருள் அப்படியில்லை. காட்சிக்கு உட்பட்டது.
கடவுள் என்பது ஒரு கொள்கை. ஒரு தத்துவம்.பரம்பொருள்
என்றால் எங்கும்
நிறைந்திருக்கும் பொருள்
என்று பொருள்.
அறிவு என்பது
மனதின் சிந்தனையின்
எல்லைக்கு உட்பட்டது.மனதின்
எல்லைக்கு அப்பாற்பட்டு
எதையும் சிந்திக்க
முடியாததால் மன
எல்லைக்கு அப்பாற்பட்ட
அறிவு இருப்பதில்லை.
அப்படி இருந்தால்
அது அறிவியல்
சட்டத்திற்கு உட்பட்டதாக
இருப்பதில்லை. பரந்து
விரிந்து கிடக்கும்
இயற்கையின் முழுத்
தோற்றத்தையும் இருக்கும்
நிலையிலிருந்து கொண்டு
அறியமுடிவதில்லை.என்றாலும்
அது அறிவியலுக்கு
உட்பட்டு ஆராய்ந்து
அறியக்கூடியதாகவே இருக்கிறது.
இன்றைக்கு இயலவில்லை
என்பதற்காக அது
என்றைக்குமே இயலாதது
என்று கூறிவிடமுடியாது.
பரம்பொருள் கடவுள் என்றாலும்
அது விதி விலக்கல்ல.அதுவும் மனதின் எல்லைக்கு உட்பட்டதே.மன எல்லைக்கு அப்பாற்பட்டு ஏதொன்றுமில்லை.அப்படியிருந்தால் அதனால் யாருக்கும் யாதொரு
பயனுமில்லை.பரம்பொருள் புரிந்துகொள்ளக் கூடியதே.