Thursday, September 26, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials 

சாதனைகளை இயற்கை எப்போதும் திறந்த வெளியில்தான் நிகழ்த்துகின்றன .எதை மறைவாகச் செய்தாலும் மறைக்க மறைக்க எதிர்ப்பு லுக்கும் என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்வது இயற்கையின் பழக்கம்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட குறுகிய கால மட்டும் கிடைக்கும் வாழ்க்கை எதற்கு ?

பெரும் பொருள் சம்பாதிக்கவா? இல்லவே இல்லை
பெரும் அறிவாளியாக உருவாவதற்காகவா? இல்லவே இல்லை .
அரும் பெரும் சாதனைகள் செய்வதற்காகவா? இல்லவே இல்லை.
பெரிய பெரிய பதவி வகிப்பதற்காகவா? இல்லவே இல்லை.


மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை.இந்த மகிழ்ச்சியை எல்லோருக்கும் கிடைக்குமாறு உறுதி செய்து கொண்டு வாழ்வதே இயற்கை நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்க்கை.அந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கு மனத்தின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்.மனத்தின் ஒத்துழைப்பு இல்லாத போது மேற்குறிப்பிட்ட புறக்காரணங்கள் நம் மகிழ்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையாக இருக்கின்றன.பொருள் சம்பாதிக்கவும்,அறிவைத் திரட்டவும் ,தனித் திறமைகளை வளர்க்கவும் முயன்று உழைக்கவேண்டும்.இவையாவும் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தேவையான மூலதனமாகும் . இவற்றால் பெரும் மகிழ்ச்சியை மனதின் நட்பால் பெற்றுவிட முடியும், ஆனால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்தர வேண்டுமானால் அதற்கு இந்த மூலதனம் அவசியத் தேவையாகின்றது. 

No comments:

Post a Comment