Monday, September 16, 2013

Creative thoughts

Creative thoughts

எல்லாவற்றிலும் தோற்றுப் போகின்றாய் என்றால் நீ சாதிக்க முடிகின்ற இலக்குகளைத் தெரிந்தெடுக்கத் தவறுகின்றாய் என்று அர்த்தம்.சக்திக்கு மீறிய கனவு உருவம் கொள்வதில்லை அது பயனின்றிச் சிதறிப் போகும். எல்லாவற்றிலும் வெற்றி பெறுகின்றாய் என்றால் இலக்குகளை  எளிதாக்கிக் கொள்கிறாய் என்று அர்த்தம்.தேவையான சக்தி குறைவாக இருந்தாலும் கனவு உருவம் கொள்வதில்லை.

ஒவ்வொரு நாளும் உனக்கு நீயே புத்துணர்வு கொள்வதற்கு உனக்குப் பிடித்தமான ஒரு வழிமுறையை நீ பழகிக் கொள்ளவேண்டும். மனம் ஓராயிரம் பணியாளர்களுச் சமம் .புத்துணர்வால் அந்த ஆயிரம் பணியாளர்களின் ஒருமித்த,உண்மையான உழைப்பைப் பெறமுடியும். 

சம்பாதித்த பணத்தை மட்டும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மட்டும் போதாது.நேரத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். நேரம் சம்பாதிக்காமலேயே கிடைக்கின்றது என்பதால் பெரும்பாலானோர் நேரத்தை வீணாகச் செலவழித்து விடுகின்றனர்.

நேரம் ஆண்டவன் எல்லோருக்கும் முன் கூட்டியே தந்த சீதனம். பணம் நீ  உழைத்துப் பெற்ற ஊதியம்.ஆண்டவன் கொடுத்ததிற்கு மேல் கூடுதலாக நேரத்தைப் பெறமுடியாது என்பதால் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிக்க முடியாததாகும்.

வாழ்க்கையில் மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்பினால் அது உன்னுடைய உண்மையான விருப்பமாக இருக்கவேண்டும்,உறுதியான தீர்மானமாகவும் இருக்க வேண்டும்.எதற்காக இந்த மாற்றம் தேவை என்பதைச் சரியாக புரிந்து வைத்திருந்தால் மாற்றத்தை நாடும் போது அது உண்மை நிகழ்வாகின்றது.


ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள ஒரு நொடிப் பொழுது கூட ஆகாது. ஆனால் அது வலிமையாக இருக்கும் போது அதன் தாக்கம் வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருக்கும். 

No comments:

Post a Comment