Monday, September 2, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் 
இன்றைக்கு இந்திய அரசியல்வாதிகள் குற்றப்பின்னணி உள்ளவர்களாகி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது .செயல்களால் குற்றவாளிகளாகவும் எண்ணங்களால் தீயவர்களாகவும் பெருகி வருவதை இனி எவராலும் தடுத்து நிறுத்தி தவாறான போக்கில் மாற்றம் செய்யமுடியாது.ஏனெனில் அவர்களுடைய செயல்களுக்கு எந்த சாட்சியமும் இருப்பதில்லை.அப்படி ஏதும் இருந்தால் அதைத் தங்கள் செல்வாக்கினால் பொசுக்கி விடுவார்கள்.சாட்சியம் தவறிப் போய் வெளிப்பட்டால் அதை மறுப்பார்கள் ,மற்றவர்கள் மீது சுமதித்திவிடுவார்கள் .என்ன வேலையானாலும் அதைச் செய்வதற்கு அவர்களிடம் அதற்குத் தகுந்த ஆட்கள் இருக்கின்றார்கள்,என்ன விலை யானாலும் அதைக் கொடுப்பதற்கு பதவியால் நிறைய கருப்புப் பணம் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு நெடுநாட்களுக்கு முன்பே தெரியும்.ஆனால் ஊடங்கங்கள் அதைப்பற்றி தெரிவித்தவுடன் அப்போதுதான் அவர்களும் தெரிந்து கொண்டது போலக் காட்டிக் கொண்டார்கள்.ஒரு வீட்டில் ஒரு திருடன் ஒரு நாள் இரவு ஒரு பொருளைத் திருடிச் சென்றான். வீட்டுக் காரனுக்குத் தெரியவில்லை .மறுநாளும் ஒரு திருடன் மற்றொரு பொருளைத் திருடிச் சென்றான் .வீட்டுக்காரனுக்குத் தெரியவில்லை .ஒவ்வொரு நாளும் திருடன் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றாலும் வீட்டுக்காரன் தெரியாதவனாக இருக்கின்றான் என்றால் அவனை எப்படி வீட்டுக்காரன் என அழைப்பது ? கருப்புப் பண விவகாரத்தில் அரசு மந்தமாகச் செயல்பட்டது என்றாலும் செயல்படுகின்றது என்றாலும் அதில் அரசியல்வாதிகளுக்கும் இன்னவென்று சொல்லமுடியாத மறைமுகத் தொடர்பு இருக்கின்றது என்றே அர்த்தப்படும்..தவறான வழியில் பொருள் ஈட்டி தவறான முறையில் கடத்தி ,தவறான செயல்களுக்காக தவறான இடத்தில் பதுக்கி வைத்திருக்கும் இந்தக் கருப்புப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் சீரழித்து வருகின்றது என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. கருப்புப் பணத்தைக் டத்தி பதுக்கிவர்களைத் தண்டிக்காமல் ,பெட்ரோல்,டீசல் ,எரிவாயு ,உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது கையாலாகாத அரசின் கொடுங்கோண்மை .

குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகள் பதவியில் இருந்து கொண்டு மேலும் மேலும் குற்றங்கள் செய்வதைத் தடுத்து நிறுத்த இனி அவர்கள் பதவியில் இருக்கக்கூடாது,தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மக்கள் நலன் கருதி சீர்திருத்தம் கொண்டு வரும்போது அதை ஆதரிக்காமல் ,தற்குச் சட்டத் திருத்தம் செய்ய அரசு முயல்கின்றது ,தீயோருக்கு எப்போதும் தீய எண்ணங்கள்தாம் மேலோங்கி வெளிப்படும் .இப்படிப்பட்ட சூழலில் காவல் துறை அரசின் கைவசமிருப்பது நாட்டின் எதிர்கால நலனுக்கு நல்லதல்ல.குற்றவாளியின் கையில் காவல் துறையும் நீதித் துறையும் இருப்பதால் தான் நாட்டில் குற்றங்களே குறையாமல் மிகுந்து வருகின்றது ,காவல் துறை மாநில ஆளுநர் வசமோ அல்லது தேர்தல் கமிஷ்னர் வசமோ இருப்பதுதான் இனி நாட்டுக்கு நல்லது .அதுவே நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது .

No comments:

Post a Comment