Friday, September 20, 2013

Vinveliyil Ulaa

இது வினோதமான உருவம் கொண்டது .மீன் வாலும் ஆட்டுத் தலையும் கொண்டதாகக் கற்பனை செய்துள்ளனர் .இது 50 விண்மீன்களுடன் மிகச் சிறியதாகத் தோன்றுகின்ற ஒரு ராசி மண்டல நட்சத்திரக் கூட்டமாகும்.சக்கிடாரியஸ் மற்றும் அக்குவாரிஸ் வட்டாரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
பாபிலோனியர்கள்,சுமேறியர்களால் இது உருவானது என்றாலும் ஆட்டுருவம் கொண்ட பான்(PAN) என்ற கடவுளின் உருவம் கிரேக்க புராண காலத்தில் தோன்றியது. கடலரக்கனான தையூனிடமிருந்து தப்பிக்க இது தன் பின் பகுதியை மீனாக மாற்றிக் கொண்டது என்று கூறுவார்கள்.
இது மிகவும் பிரபலமானதில்லை என்றாலும் சூரியன் வலம் வரும்
ரா வீதியில் மைந்துள்ளது.மகர ராசிக்குரிய காப்ரிக்கான் வட்டாரத்தில்  சூரியன் 19 ஜனவரி முதல் 16 பிப்ரவரி ரையிலான காலத்தில் ஞ்சரிப்பார்.
இதன் பிரகாசமான் விண்மீன் டெனப் அல் கெடி(Denab Algedi) என்ற டெல்டா காப்ரிக்கோர்னி ஆகும். இதன் தோற்ற ளிப்பொலிவெண் 2.9 ஆக உள்ளது.அல்கெடி,ஜியோடோ என்று இரு விண்மீன்களைக் கொண்டது ஆல்பா காப்ரிக்கோர்னி. இவையிரண்டும் மஞ்சள் நிறத்துடன் ளிப்பொலிவெண் முறையே 3.6 ,4.3 கொண்டுள்ளன. இதன் பிரகாசமான விண்மீன் 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு பெரு விண்மீனாகவும் ,மற்றொன்று மங்கலாகவும் ஆனால் மாபெரும் விண்மீனாக 660 ஒளிஆண்டுகள் 


தொலைவிலும் உள்ளன.இவை உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரட்டை விண்மீன் இல்லை.கடல் ஆட்டின் முகப்பகுதியில் மைந்துள்ள பீட்டா காப்ரிக்கோர்னி அகன்ற இடைவெளியுடன் கூடிய இரு விண்மீன்களாலான இரட்டை விண்மீனாகும்.முதன்மை விண்மீன் 3.1 தோற்ற ளிப்பொலிவெண்ணுடன் கூடிய மஞ்சள் நிறப் பெரு விண்மீனாகவும் துணை விண்மீன் 6 தோற்ற ளிப்பொலிவெண்ணுடன் கூடிய விண்மீனாகவும் 300 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளன

No comments:

Post a Comment