Friday, September 13, 2013

Mind without fear

Mind without fear

கடவுள் என்பது ருவம் இல்லை ர்வு, வெறும் டல் இல்லையிர். கடவுள் ஒரு கற்பனை மனிதன்.மனிதர்கள் அறவழியைக்
டைப்பிடித்து ஒழுகுவதற்கு மனிதர்கள் கண்டுபிடித்த ஒரு கதாபாத்திரம்.இந்த கதாபாத்திரத்திடம் எல்லா நல்லியல்புகளும் ஒரு சேரக் கூடியிருக்கின்றன. கடவுளிடம் நல்லறிவு,நல்லறம்,நற்சிந்தனை,நல்லொழுக்கம்,
என னைத்திலும் நற்பண்புகள் நாம் திர்பார்பதைவிட மிதமிஞ்சி இருக்கின்றன
ஒவ்வொரு மனிதனும் கடவுளை நினைந்து த்தகைய சிறந்த நற்பண்புகளைப் பெறவேண்டும் என்பதற்காகவே கடவுளைப் படைத்திருக்கின்றார்கள். கடவுளை மனித உருவிலும் ,குடும்பஸ்தனாகவும் சித்தரித்துக் காட்டியிருப்பதற்குக் காரணமும் இதுதான்.
பள்ளித் தேர்வில் ல்ல மதிப்பெண் வாங்கவில்லை என ஒரு அப்பா தன் பிள்ளையைக் கடிந்து அறிவுரை கூறுகின்றார். தவறான அல்லது விருப்பமில்லாத வழியில் செல்லும் தன் பிள்ளைக்கு நல்வழி காட்ட
அவர் உயர் மதிப்பெண் வாங்கிய அடுத்த வீட்டுப் பையனைப் போல படி என்றும் அவனிடம் தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள் என்றும் கூறுவார்.  

வாழ்க்கையில் நாம் எந்தப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் அதைச் சரியாகத் தீர்வு செய்து சுமூகமாக விடுபட அனுபவம் பெற்ற சான்றோர்களை நாடி யோசனை கேட்கச் சொல்வார்கள்.


தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் கருத்துகளை அறிந்து கொண்டால் நாமும் அவர்களைப் போல உயரலாம் என்று அவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நூல்களையும் வாங்கிப் படிக்கச் சொல்லுவார்கள். சிலர் பின்ற்றி நல்வழி ஒழுக பள்ளியில் உயர் மதிப்பெண் வாங்கிய மாணவன், தொழிலில் சாதனை படைத்த முன்னோடி, விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்,புதிய கண்டிபிடிப்புகளைக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு அர்ப்பணித்த  விஞ்ஞானி போல எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு படித்தர மனிதனே கடவுள்.

No comments:

Post a Comment