Thursday, September 19, 2013

Mind without fear

Mind without fear
மிருகங்களின் வாழ்க்கை மனிதர்களின் வாழ்க்கைக்கு  முற்பட்டது என்றாலும் மிருகங்களின் வாழ்க்கையே மேலானதாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது வாழக்கை  என்பது கொடுக்கப்பட்ட வாழ்நாளை பிறருக்குத் துன்பம் தராமல் மகிழ்ச்சியாகக் கழிப்பதாகும்.தன் இனத்தைச் சாகாமல் காக்க இனவிருத்தி செய்வதற்கு தன்னைத் தானே காத்துக் கொண்டுயிர் வாழவதாகும். இதை மனிதர்களை விட மிருகங்களே மிகச் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றன. வளர்ப்பு மிருகங்களை விட காட்டில் தனித்து வாழும் மிருகங்களுக்கு வானமே கூரை பரந்த நிலமே வீடு. ஒவ்வொரு நாளும் அவை சந்திக்கின்ற ஆபத்துக்கள் ஏராளம். தன் எதிரியிடமிருந்து தன்னையும் தன் குட்டிகளையும் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருநாளும் இடம் மாறவேண்டியிருக்கிறது. நிரந்தரமான வசிப்பிடம் இல்லை. வலிமையான எதிரியிடமிருந்து உயிர் பிழைக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது உணவிற்காக வேட்டையாடும் போது எதிர்பாராத ஆபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது. ன்னுடைய தேவைகள் அனைத்தையும் தன்னுடைய எல்லைக்குள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருப்பதால் அவைகளுக்கு எப்போதும் உயிருக்கு ஆபத்து  தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆண் மிருகங்கள் இனச் சேர்க்கைக்குக்குக் கூட தன்னினத்தோடு சண்டை போட வேண்டி இருக்கிறது. இது சாகாத சமுதாயத்தைக் காக்க வலிமை மிக்க புதிய தோன்றல்களைப் படைக்க வலிமைமிக்க ணால் மட்டுமே முடியும் என்பதை அவை புரிந்து வைத்திருக்கின்றன. இரவில் அடர்ந்த காட்டில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. உயிர் எந்த நிமிடமும் பரிபோகலாம் என்ற நிலையே உள்ளது. ஒளிந்து கொள்ள நான்கு சுவர்களால் அடைக்கப்பட்ட வீடு அவைகளுக்கு இல்லை.தையும் திறந்த வெளியிலேயே செய்ய வேண்டியிருக்கிறது.

பருவ மாற்றங்களால் வாழ்விடத்தில் ஏற்படும்  பற்றாக்குறையை எதிர்கொள்ள அவை பலமுறை நீண்ட தொலைவு, ஆறு,மலைகளைக் கடந்து  செல்ல வேண்டியிருக்கிறது..அப்போது வேற்று மிருகங்களால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படலாம். இவையாவும் மிருகங்களுக்கு மிருகங்களால் ஏற்படும் ஆபத்துகளாகும்.

காடுகளை ழிப்பதாலும் காட்டுத் தீயாலும்,வெள்ளப் பெருக்காலும்,மனிதர்கள் வேட்டையாடுவதாலும்,சுற்றுச் சூழலை மாசு படுத்துவதாலும் அவைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் இன்னும் மிகைப்படுகின்றன.இவற்றையெல்லாம் சந்தித்தாலும் மனிதர்களை விட மிருகங்கள் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்து விட்ட திருப்தியோடு மடிகின்றன. மிருகங்கள் பிறக்கும் போது இறைவன் கொடுத்த வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு உலகில் மன நிறைவோடு வாழ்ந்து விட்டு மறைக்கின்றன. அவைகளிடம் மனக் குறை ஏதுமில்லை. மனிதர்கள் கண்ட நாகரீக வளர்ச்சி மனிதர்களின் வாழக்கையை எளிமைப்படுத்தி இருக்கலாம் ஆனால் வாழ்க்கைக்கு பெருமையும் சிறப்பும் சேர்க்கவில்லை.நாகரீக வளர்ச்சியால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் விலகிச் சென்றுள்ளார்கள். நாகரீகத்தால் மனிதர்கள் பின்னோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைத்தான் மிருகங்கள் நமக்கு ஒவ்வொரு நிமிடமும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment