Wednesday, September 4, 2013

Creative Thoughts

Creative Thoughts

புதியனவற்றிற்கு எல்லாம் பழையனவையே மூலமாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.புதிய உயிரினத்தின் தோன்றலுக்கு ஏற்கனவே இருக்கும் மூத்த உயிரினமே மூலம். புதிய உறவுகளை பழைய உறவுகளால் மட்டுமே தோற்றுவிக்க முடியும்.புதிய திறமைகள் ஊற்றெடுக்க பழைய திறமைகளே மூலம்.புதிய எண்ணங்களுக்கு பழைய சிந்தனைகளே மூலம்.புதிதாய் ஏதாவதொரு பொருளைப் பெறவேண்டுமானால் அதற்கு ஏற்கனவே இருக்கும் பொருளே மூலம்.மூலமின்றி புதிய வரவுகள் ஏதுமில்லை.மூலமில்லாமல் எதையும் நிரந்தரமாகப் பெற முடியாது என்பது இயற்கையைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மூலம் எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு புதியனவற்றைப் பெறுவதற்குரிய சக்தியும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால் காலத்தை வீணாக்கி விட மனம் சம்மதிக்காது. 

எதையும் சுயமாகச் சம்பாதித்துப் பயன்படுத்திப் பார். உலகத்தையே வென்று விட்ட மகிழ்ச்சியில் நீ  மிதப்பாய் 

எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் செய்ய நினைக்கின்ற காரியங்கள் பெரும்பாலும் பலமுறை தள்ளிப் போடப்பட்டு  ஒருமுறை கூடச் செய்யப்படுவதில்லை.பல செயல்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் எதை முதலில் செய்ய வேண்டும்,எதை அடுத்துச் செய்ய வேண்டும்,எதைப் பின்னர் செய்ய வேண்டும் என்று முறைப்படுத்திக் கொள்வது அவசியமாகும் .ஏனெனில் காலத்தால் செய்ய வேண்டியனவற்றை காலத்தில் செய்ய வேண்டும் .

நாம் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பதையே செய்து கொண்டிருந்தால் அதற்காக முதலில் எது கிடைத்ததோ அதுதான் திரும்பத் திரும்ப கிடைக்கும் .ஒரே பாடத்தை திரும்பத் திரும்பப் படிப்பதால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது .ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் புதிய நுட்பங்களை அறியமுடியாது. புதிய பலன்களையும் பெறமுடியாது. புதிய பலன் களைப் அடைய விரும்பினால் திறமை ஊடுறுவிய செயல்களினால் மட்டுமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் .

உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும் ஒருபோதும் வீட்டின் சுவரேறிக் குதித்து கொல்லைப் புறமாகவோ ஜன்னல் வழியாகவோ வருவதில்லை.


மிகப் பெரிய சாதனை புரிய முயற்சிக்கும் போது தோல்வியைச் சந்தித்தாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.ஏனெனில் அப்படிப்பட்ட தோல்வி தோல்வியோடு முற்றுப் பெறுவதில்லை.அதை வெற்றியின் முதல் படிக்கட்டு எனக் கருதினால் அதுவும்  ஒரு வகையில் வெற்றிதான்.முயற்சி ஏதுமில்லாமலேயே சும்மா இருந்துகொண்டு பெற்ற தோல்விதான் உண்மையான தோல்வி, மற்றவையெல்லாம் தோற்றத் தோல்விகளாகும் .

No comments:

Post a Comment