Tuesday, September 24, 2013

Arika Iyarpiyal

அறிக இயற்பியல் 

ஒரு பக்கம் அடைக்கப்பட்டு, ஒரு பக்கம் திறவலான ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயை செங்குத்தாக நிறுத்தி அதில் பாதியளவு நீரிட்டு நிரப்பி அதன் முகவாயில் அதிர்வுரும் ர் இசைக்கவையை குழாயின் சுவரைத் தொடாமல் வைக்கவும். நீர் மட்டத்தை மெதுவாக மாற்ற, ஒரு குறிப்பிட்ட நீர்த்தம்பம் இருக்கும் போது லி உரத்துக் கேட்கிறது .இதையே ஒத்ததிர்வு என்பார்கள். இன் நிலையில் இசைக்கவையின் அதிர்வும், கண்ணாடிக் குழாயில் உள்ள காற்ணுக்களின் அதிர்வும் சமமாக இருக்கும். காற்றுத் தம்பத்தின் நீளம் λ /4 ன் ஒற்றைப்படை மதிப்பில் இருக்கும். ஆனால்
லியின் திசை வேகம் அதிர்வெண் மற்றும் லைநீளம் இவற்றின் பெருக்கல் பலனாகும்.
ஒத்ததிர்வுக் குழாயில் உள்ள நீரை நீக்கி விட்டு பாதரசத்தை இட்டு நிரப்பினால் ஒத்ததிர்வு நீளம் என்னவாக இருக்கும்?.


 ஒத்ததிர்வுக் குழாயில் நீருக்குப் பதிலாக பாதரசத்தை நிரப்பும் போது காற்றுத் தம்பத்தில் இருக்கும் நீராவி நீக்கப்படுகின்றது. அதனால் ரப்பதம் குறைய லியின் திசை வேகமும் குறைகிறது.எனவே ஒத்ததிர்வு நீளம் குறையும் எனலாம்.

No comments:

Post a Comment