Friday, September 6, 2013

Mind without fear

Mind without fear

பல மூடப்பழக்கங்கள் சரியானவை போலத் தோன்றும்.ஆனால் பெரும்பாலும் அவை தப்பான பழக்க வழக்கமாக இருக்கும்.ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பின்வருவோரும் மரபு வழி வந்ததென அதை மறுப்பின்றி மாற்றமின்றி பின்பற்றி ஒழுகுகின்றார்கள்.
தப்பான ஒரு பழக்க வழக்கம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டு தொடரப் படுகிறது என்பதை ஆராய்ந்தால் மூடப்பழக்கம் பற்றிய இன்னும் அறியப்படாத வேறு சில உண்மைகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம் .

அனுபவமில்லாத ஒருவன் அல்லது திறமையின்றி செயலை முழுமையாகச் செய்து முடிக்க முடியாமல் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் ஒருவன் தன் அறிவுக்கும் திறமைக்கும் மீறிய ஒரு செயலில் இறங்க முற்படும்போது அவனை அதைரியப்படுத்தி விடாமல் காக்கும் பொருட்டு அவனுக்கு அறிவுரைகள் கூறலாம் அல்லது அது தொடர்பாக ஒரு மூடப்பழக்கத்தைக் கூறி அவனை அப்படிச் செய்யாமல் தடுக்கலாம்.அறிவுரைகள் கூறும்போது அவை பெரும்பாலும் விவாதங்களுக்கு உட்படும்.சில சமயங்களில் எதிர் வாதத்தை எதிர் கொள்ளமுடியாமல் அறிவுரை சொன்னவரே  பின்வாங்க வேண்டிவரும். எனவே மூடப்பழக்கத்தை போலியான நிகழ்வுகளுடன் பின்னியாவாறு சொல்லி தன் விருப்பத்தை முன்னோர் சொல்லாக மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளுமாறு செய்துவிடுகின்றனர். காலப்போக்கில் அப்டிச் சொல்வது கேட்பவனின் நலனுக்கு மட்டுமின்றி சொல்பவனின் நலனுக்காகவும் சொல்லும் பழக்கமாக மாறிவிட்டது .அதை மெய்யறிவினால் புரிந்து கொள்ளமுடியாவிட்டால் தப்பான பழக்க வழக்கங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடிவதில்லை. அது காலங் காலமாய்த் தொடர எல்லோரும் அனுமதித்து விடுகின்றார்கள். இதைப் புரிந்து கொள்ள கணிதப் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு தப்பிதக் கருத்தொன்றைக் கூறலாம் .கீழ்க் கூறு அதிகமானால் பின்னங்களின் மதிப்பு குறைவாகும் என்பது நாமறிந்த உண்மையாகும் .எனவே 1/2 > 1/8, இதை (1/2)2 > (1/2)3 எனக் குறிப்பிடலாம். மடக்கை (logarithms) எடுத்தால் 2 log (1/2) > 3 log(1/2),log(1/2) ஆல்  வகுக்க 2>3 என்ற தவறான விடை கிடைக்கும் இது தவறு என்று முறையாகக் கல்வி கற்றிருந்தால் தெரியும்.கல்வி அறிவால் புரிந்து கொள்ளாவிட்டால் இதை ப்புக் கொள்ளாவிட்டாலும் மறுக்க முடியாது.log (1/2) என்பது எதிர் மதிப்புக் கொண்டது. அதை நீக்கும் போது சமனின்மைக் குறியீட்டை பக்கம் மாற்றிக் கொள்ளவேண்டும். இது முமையான அறிவு. முழுமையான அறிவில்லாமல் தப்பானவற்றைப் புரிந்து கொள்ளமுடியாது. அதுபோல முழுமையான திறமையின்றி செயலைப் பயனுறு திறனுடன் முடிக்க முடியாது.முயன்றால் இழப்பே வரும்.   

No comments:

Post a Comment