Wednesday, September 11, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் 
நம் நாட்டுக் காவல் துறையில் வெறும் துறை மட்டும் தான் இருக்கிறது காவல் காணாமற் போய்விட்டது.காவலில்லாத சமுதாயத்தில் மக்கள் குற்றவாளிகளைப் பார்த்து குற்றவாளிகளாகிக் கொண்டிருக்கின்றார்கள் அதில் காவல் துறையினரும் விதிவிலக்கில்லை.மக்களை விட காவல் துறையினரே இதனால் அதிகம் குற்றம் புரிகின்றார்கள்.புள்ளி விவரங்களின் அடிப்படையில் யார் பகுப்பாய்வு செய்தாலும் காவல் துறையினரே சமுதாயத்த்தில் குற்றங்கள் வளரக் காரணமாய் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அறியப்பெறுவர்.இது அறிந்தும் அறியப்படாத உண்மையாய் ஊடகங்களில் இருந்து வருகிறது.

அரசு ஊழியர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும் அதிலிருந்து கொண்டு செய்ய வேண்டிய சமுதாயப் பணிகளைச் செவ்வனே செய்யாமல் அதைச் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிகளிடமிருந்து தனியாகப் பணம் வசூல் செய்கின்றார்கள்.இவர்களுடைய இந்த மனப்போக்கினால் மென்மேலும் பணம் வசூலிக்கும் வேற்று வழிமுறைகளைத் தேடி,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு இவற்றை மறந்துவிட்டு பணியின் நேர்மையைத் தொலைத்துவிடுகின்றார்கள்.
ஒரு வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.காவல் துறைக்குச் சென்றால் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்க்க ரூபாய் 3000,மோப்ப நாய் வரவழைக்க ரூபாய் 3000,FIR போட ரூபாய் 5000 என ரேட் பட்டியலை இரகசியமாய் கிசுகிசுப்பார்கள்.பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் பெற்றபின்பும் ஆசை விடுவதில்லை. குற்றவாளியைப் பிடித்து பணம் கறக்கப் பார்ப்பார்கள் .பல லட்ச ரூபாய் பறிகொடுத்தவருக்கு இறுதியில் சில யிரம் கிடைத்தாலே அதிகம் .குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்காவிட்டால் சமுதாயத்தில் குற்றங்கள் பெருகும்,குற்றங்கள் பெருக்கப் பெருக அவற்றைக் கட்டுப்படுத்துவது மேலும் கடினமாகும் .இதைச் செய்யாமல் வேற்றுச் சிந்தனைகளால் மாற்றுச் செயல்களைச் செய்துவரும் காவல் துறையினரின் உண்மையான ண்ணத்தை இது பிரதிபலிப்பதா இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது மற்றும் இழந்தவரின் பொருளை மீட்டுக் கொடுப்பதற்காக மட்டுமில்லை,சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாமல் இருப்பதற்காகவும் தான். குற்றவாளியைப் பிடித்து அவனோடு இரகசிய ஒப்பந்தம் செய்து திருட்டுப் பொருளில் பங்கு பெறுதல்,அப்படிப் பங்கு பெறுவதற்காகவே குற்றவாளிகளை உருவாக்குதல் போன்ற செயல்களை காவல் துறையினர் செய்து வருகின்றனர். கூட்டணியால் தவறான விஷயங்கள் வெளியில் கசிந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றார்கள் 

விவரம் தெரிந்த மக்கள் எதற்கும் காவல் துறையினரை நாட விரும்புவதில்லை. இழப்பு இழப்போடு போகட்டும்,கூடுதல் இழப்பு வேண்டாம் என நினைக்கின்றார்கள்.இதனால் ஒரு லட்சம் குற்றங்களில் 90 ஆயிரம் குற்றங்கள் வெளிவருவதில்லை.மீதி 10 ஆயிரம் குற்றங்களில் 5 ஆயிரம் மட்டும் பதிவு செய்யப்படுகின்றன.இவற்றுள் ஒரு நூறு மட்டும் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளால் கண்டு பிடிக்கப்படுகின்றன. மற்றொரு நூறு நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள். அப்போது பாதிக்கப்பட்டவருக்கு திருட்டுப் பொருளை முழுதாய் இழந்ததோடு கூடுதலாய் சில ஆயிரம் ரூபாய் செலவுக்கு ஆளாவர்.காவல் துறையினரின் இந்த போக்கு குற்றவாளிகளுக்கு மிகவும் சாதகமா இருப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பேயில்லை

No comments:

Post a Comment