Sunday, September 1, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்- தொடர்ச்சி -அயோடின் -பயன்கள் 

அயோடின் கூட்டுப் பொருட்கள் கரிம வேதியியலிலும் மருந்து
உற்பத்தித் தொழிலிலும் பயன்படுகின்றன டிஞ்சர் ஏனப்படும் மருந்து அயோடினால் ஆனதாகும்.இது ஸ்பிரிட்,பொட்டாசியம் அயோடடு அயோடின் சேர்ந்த கலவையாகும்.அயோடோபாம் ,அயோடோல் போன்றவை நச்சுத் தடையாகப் பயன்படுத்தப்படுகின்றன.நிலக்கரித் தாரிலிருந்து சாயங்கள் தயாரிக்க அயோடின் பயன்படுகின்றது.சில்வர் அயோடைடு ஒளிப்படத் தட்டு மற்றும் சுருள்களில் ஒளிஉணர் பொருளாகப் பயன்படுகின்றது. அயோடினுக்கு 23 அணு ண்மங்கள்(Isotope) உணரப்பட்டாலும் அதில் I -127 மட்டும் நிலையான அணு ண்மமாக இயற்கையில் கிடைக்கின்றது .கதிரியக்க அணு ண்மமான I-131-ன் அரை வாழ்வு  8 நாட்கள்.இது தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகளை அறியப் பயன்படுகின்றது.

அயோடின் உப்பு 

அயோடின் ஓர் இன்றியமையாத தனிமச் சத்தாகும் .ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவையாக இருக்கின்றது. இன்றியமையாத உலோகச் சத்துக்களைப் போலன்றி அயோடின் ஒருவருடைய வாழ்நாள் முழுதும் சீராகத் தேவைப்படுவதாக இருக்கின்றது.இது தொண்டையின் கீழ் பகுதியில் இரு மருங்கும் மைந்திருக்கின்ற தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படும் தைராக்சின் என்ற நொதிமத்தின் ற்பத்திக்கு அவசியமாக இருக்கின்றது.ஒரு தைராக்சின் மூலக்கூறு உருவாக்கப்பட நான்கு அயோடின் அணுக்கள் தேவை.இது மூளையின் வளர்ச்சியிலும் உணவுப் பொருளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களிலிருந்து ஆற்றலைப் பெறும் உயிர் வேதியியல் வழி முறையிலும் தைராக்சின் டுபடுகின்றது .உடல் வெப்பநிலை மாறாமல் ஒரு சீராக வைத்திருக்க தைராக்சின் துணை புரிகின்றது.சிசுவாக கருப்பையில் இருக்கும்போது இந்த அயோடின் போதிய அளவில் தாய்க்குக் கிடைக்காது போனால் கருச் சிதைவு,இறந்து பிறத்தல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகின்றது.


அயோடின் பற்றாக் குறையால் தொண்டைப் பகுதியில் ழலைக் கட்டியும்,பிற உடல் நலக் கோளாறுகளும் உண்டாகின்றன.அயோடின் பற்றாக் குறையைத் தவிர்க்க கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் சாதாரண உப்போடு அயோடினைச் சேர்த்த்து ங்குகின்றார்கள் 10 கிராம் உப்புடன் 150 மைக்ரோ கிராம் பொட்டாசியம் அயோடைடு அல்லது பொட்டாசியம் அயோடேட் சேர்ப்பார்கள்.பொட்டாசியம் அயோடைடைவிட  பொட்டாசியம் அயோடேட் அதிகம் பயனுள்ளதாக இருக்கின்றது. இது வரம்பிற்கு உட்பட்ட ஒளி ரப்பதம் வெப்பநிலை மற்றும் சேர்க்கப்படும் பொருளின் அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை,உப்பிலுள்ள வேற்றுப் பொருள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை .

No comments:

Post a Comment