Saturday, September 14, 2013

Sonnathum Sollathathum

சொன்னதும் சொல்லாததும்

லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) ஜெர்மனி நாட்டின் புகழ் பெற்ற இசைக்கலைர். 1770 முதல் 1827 வரை 56 ஆண்டு காலம் வாழ்ந்த இசை மேதை. சிறுவயதில் பியானோ வாசிப்பதில் ஆர்வம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக் கொண்டார்.அவரது தந்தையார் ஜோகன் வான் பீத்தோவன் ஒரு இசைக் கலைராக இருந்ததால் அவரிடம் இந்த இசை ஆர்வம் வெகு இயல்பாக ஒட்டிக்கொண்டது .ஆர்வம் ஒரு மகத்தான சக்தியை உள்ளுக்குள் உருவாக்கக்கூடியது  என்பதை சிலரே புரிந்து வைத்திருக்கின்றார்கள்.பீத்தோவனின் ஆர்வம் அவரை ஒரு மிகத் திறமையான இசைக்கலைராக உயர்த்தியது .ஆர்வமிருந்தால் யாரும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு பீத்தோவனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.  
எதையும் முறையாகக் கற்றுக் கொள்ளாவிட்டாலும் ஆர்வம் புரிதல் மூலமாக அனைத்து நுட்பங்களையும் கற்றுக் கொடுத்து விடும்.பீத்தோவனிடம் இனம் புரியாத சக்தி உள்ளுக்குள் ஊற்றெடுத்து இசை உலகின் உச்சத்தை தொவைத்தது. புதிய புதிய இசைப் மொழிகளை உருவாக்கினார். பல இசைக்கலைர்களைச் சந்தித்து புதிய நுட்பங்களையும் தெரிந்துகொண்டார்.28 ஆம் வயதில் அவர் செவிடானார். ஒரு முறை இதன் காரணமாக மன வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூட முடிவெடுத்தார். அவர் அப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பரேயானால் உலகம் ஒரு இசை மேதையை இழந்திருக்கும்
அதன் பின் அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனினும் பியானோவில் இசை மொழிகளை உருவாக்க அவர் தவறவில்லை. அதுவே அவருக்கு அழியாப் புழைத் தந்தது.

“இசை மனிதர்களின் ஆன்மாவிற்கும்,உணர்விற்கும் டை ஊடகமாக இருக்கிறது” என்றும் “புத்திசாலித்தனம் மற்றும் தத்துவத்தை விட இசையின் ர்ப்பு சக்தி அதிகம்” என்றும்“பீத்தோவன் இசையை எழுதுவார்.அதற்கு கடவுளுக்கு நன்றி,ஆனால் அவரால் அதைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் செய்யமுடியாது” என்றும் “நீ யார்? நீ காதல் விளையாட்டில் எதிர்பாராமால் பிறந்தவன். நான் யார்? நான்,நான் தான். இங்கே ஆயிரக்கணக்கான இளவரசர்கள் இருக்கலாம்,ஆனால் இசைக்கலைன் ஒரே ஒரு பீத்தோவன் தான் இருக்கின்றான்” என்றும் உங்கள் தவறுகளை நீங்களே அனுமதிப்பதை விட சாகித்துக் கொள்ள முடியாத வேறொன்று ஒன்றுமில்லை” என்றும்
இவர் கூறி பொன்மொழிகள் மறக்கமுடியாதவை. இசைக்கு தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக்கொண்டதால் அவரால் சாதிக்கமுடிந்தது.

ஊணமில்லாத மனிதர்களை விட ஊணமுள்ள மனிதர்களே தங்கள் திறமையை முழு அளவில் வெளிப்படுத்துவதில் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதற்கு பீத்தோவனின் வாழ்க்கை மற்றோர் எடுத்துக்காட்டு

No comments:

Post a Comment