Tuesday, September 17, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்

இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைந்தது வருகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இந்திய நிதி அமைச்சருக்குத் தெரியாது.வந்த பின் ஒருவர் இழப்பிற்கு பலவிதமாக விளக்கம் கொடுக்கலாம்.வரும் முன் காக்க தக்க நடவடிக்கை எடுக்கத் தெரிந்த மதி நுட்பம் அமைச்சருக்குரிய இலக்கணம் என்று வள்ளுவன் தன் குறளிலில் கூறியுள்ளான். அவ்வளவிற்குத் தெரியாவிட்டாலும் ஓரளவாவது தடுத்து நிறுத்த முயன்றிருக்கலாம். 
ஒரு நாட்டில் பணத்தின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சிக்கு பொருளாதார
வல்லுநர்கள் பாட நூல்களில் சொன்ன கருத்துகளை நினைவுபடுத்திச் சொல்லியிருப்பது ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நிதி அமைச்சரின் தகுதியைக் குறைவாகவே மதிப்பீடு செய்கிறது.
ஓர் நாட்டில் எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசின் வருமானமே அதிகம். அதைச் சரியாக நிர்வகித்தால் பல மடங்கு லாபம் சம்மதிக்க முடியும். முதலிருந்தும் லாபம் ட்ட முடியவில்லை, எல்லாவற்றையும் செலவழித்தே ரைகின்றன என்றால் அது நாட்டின் வளர்ச்சியை ஒருநாளும் முடுக்கிவிடாது.செலவு செய்து மொத்த வருவாயை கரைப்பதற்கே நாங்கள் என்ற தோரணையில் செயல்படுவது நல்ல அரசுக்கு இலக்கமில்லை. எந்த பிற்பலனும் தராத செலவுகளைச் செய்வதை தவிர்த்தாலே பாதி முன்னேற்றம் கிடைத்துவிடும் 
பலன் தரும் தொழில்களில் ஊக்குவியுங்கள். அதில் அரசு முதலீடும்  செய்யலாம் 
பின்னாளில் வருவாயைப் பலமடங்கு உயர்த்திக் கொடுக்கும் ஆராய்ச்சிகளை ஆதரியுங்கள்.பதவியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக

மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வதினால் நாடு பலவீனமாகிக் கொண்டே வருகிறது  

No comments:

Post a Comment