Tuesday, October 15, 2013

Vinveliyil ulaa

விண்வெளியில் உலா
கும்ப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்-அக்வாரிஸ் 
இக் கூட்டம் ஓர் இளைன் ஜாடியிலிருந்து நீரைக் கொட்டுவது போலக் காட்சி தருகின்றது.இதிலுள்ள காமா,சீட்டா,ட்டா மற்றும் பை அக்வாரி என்ற நான்கு விண்மீன்கள் ‘Y’ வடிவத்தில் அமைந்துள்ளன.இது நீர் ஜாடி போல வர்ணிக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து கொட்டும் நீர் ஒரு பெரிய மீனின் வாயில் பாய்வது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது..இந்த மீன் அண்டை வட்டாரத்திலுள்ள பிஸ்சஸில் உள்ளது.
90 விண்மீன்களைக் கொண்ட இவ்வட்டாரம் கும்ப ராசிக்குரிய நட்சத்திர மண்டலமாகும்.சூரியன் ஒவ்வொரு வருடமும் 16 பெப்ரவரி முதல் 11 மார்ச் வரை இங்கு இருந்து தங்கிச் செல்வார்.
சீட்டா அக்வாரி ,’Y’ வடிவக் கூட்டத்தில் மையத்திலுள்ள சந்திப்பில் உள்ளது.இது நெருக்கமானதோர் ட்டை விண்மீனாகும்.1777 ல் இதைப் பகுத்துணர்ந்து முதன் முதலாக ட்டை விண்மீன் என அறிந்தனர். இதில் 4 ஒளிப் பொலி வெண் கொண்ட வெண்ணிறமான இரு விண்மீன்கள் ஒன்றையொன்று 850 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன..இது 103 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .
தோற்ற ஒளிப் பொலிவெண் 2.90 உடன்  612 ஒளி ஆண்டுகள் தொலைவில் சாடல்சண்ட்(Sadal sund) என்ற பீட்டா அக்வாரியும்,2.95 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் 759 ஒளி ஆண்டுகள் தொலைவில் சாடல் மெலிக்(Sadal melik) என்ற ஆல்பா அக்வாரியும் 3.27 ஒளிப் பொலிவெண்ணுடன் 159 ஒளி ஆண்டுகள் தொலைவில்  ஸ்ஹாட் என்ற டெல்டா அக்வாரியும் 3.73 ஒளிப் பொலிவெண்ணுடன் 392 ஒளி ஆண்டுகள் தொலைவில் லாம்டா அக்வாரியும் 3.78 ஒளிப் பொலிவெண்ணுடன் 230 ஒளி ஆண்டுகள் தொலைவில் அல்பாலி(Albali)  என்ற எப்சிலான் அக்வாரியும் 3.86 ஒளிப் பொலிவெண்ணுடன் 158 ஒளி ஆண்டுகள் தொலைவில் சாடசிபியா(Sadachbia) என்ற காமா அக்வாரியும் உள்ளன

நீர் ஊற்றும் இளைனின் இடது கைப் புயதித்திற்கு சற்று மேலாக M2 என்ற கோளக் கொத்து விண்மீன் கூட்டம் மங்கலாகத் தோன்றுகின்றது..இது பெரியதாகவும், பிராகாசமிக்கதாவும் இருக்கவேண்டும்.இதன் விட்டம் 17 வினாடிகள் கோ விலக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதில் பெரும்பாலான விண்மீன்கள் வெப்ப மிக்கவை. ஹெர்குலிஸ் வட்டாரத்திலுள்ள M13 என்ற கோளக் கொத்து விண்மீன் கூட்டத்தை விட அதிக எண்ணிக்கையில் விண்மீன்களைக் கொண்டுள்ளது.ஆனால் இது 55000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 

No comments:

Post a Comment