Wednesday, October 9, 2013

arika ariviyal

அறிக அறிவியல் 
ஒரு லாடாக் காந்தத்தைக் கொண்டு ஓர் இழை விளக்கு ஒரு திசை மின்னோட்டம் (dc) பாயும் சுற்று அல்லது மாறு திசை மின்னோட்டம் (ac) பாயும் சுற்று இதில் எதில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். எது எங்ஙனம் கூடும் என்பதை விளக்கிக் கூறு.

லாடாக் காந்தத்தை எரியும் இழை விளக்கிற்கு அருகில் கொண்டு செல்லும் போது காந்தப் புலம் இழை வழிச் செல்லும் மின்னோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை எதிர்க்கின்றது.ஒரு திசை மின்னோட்டத்தில் எலெக்ட்ரான்கள் ஒரு சீரான வேகத்தில் பாய்வதால் மின்னோட்டத்தில் மாற்றம் இல்லை.அதனால் காந்தப் புலம் ஒரு திசை மின்னோட்டத்தை பாதிப்படையச் செய்வதில்லை. ஆனால் இதுவே மாறு திசை மின்னோட்டமெனில் 

மின்னோட்டத்தின் திசை மாற்றத்தினால் அதன் அளவு காந்தப் புலத்தினால் பாதிக்கப்படுகின்றது.அதனால் இழை அலைவுற ஒளியின் செறிவு குறைந்து மங்கிப் போகின்றது.இந்த வேறுபாட்டைக் கொண்டு மின் மூலத்தின் தனித் தன்மையை அறியலாம்

No comments:

Post a Comment