Saturday, October 12, 2013

sonnathum sollaathathum

“செய்யவேண்டிய ஒன்றைப்பற்றி யோசித்துப் முடிவு செய்ய நெடு நேரம் எடுத்துக் கொண்டால் அது ஒருபோதும் செய்து முடிக்கப்படுவதில்லை”.
“நீ செய்யவேண்டிய வேலைகள் அல்லது நோக்கங்கள்   ஒவ்வொன்றிலும் ஒரு வரம்பை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டால்,அப் பழக்கம் உன்னுடைய பணிகள் மற்றுமின்றி வாழ்க்கையிலும் ஊடுருவும். அங்கே சமவெளிகள் மட்டுமே இருக்கின்றன. அங்கே தொடர்ந்து நீ தங்குவது கூடாது. நீ அதற்கும் அப்பால் செல்லவேண்டும்” 
“இலக்கு என்பது எப்போதும் அதை அடைவது என்ற பொருள் கொள்வதில்லை  அதைப் பற்றி பரிபூர்ணமாக சிந்திப்பதும்,நோக்கம் கொள்வதும் ஆகும்” 
“ஒரு முட்டாள் புத்திசாலித்தானமான பதிலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஒரு மேதை,முட்டாள்தனமான கேள்வியிலிருந்து அதிகம் கற்றுக்கொள்வான்.” 
“10000 குத்துக்களை ஒரு முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம் பயப்படுவதில்லை. ஆனால் ஒரு குத்தை 10000 முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம் பயப்படுகின்றேன்என்றும்  
“நீ எப்போதும் நீயாக இரு,உன்னைப் பற்றியே வெளிப்படுத்திக் காட்டு ,உன் மீது நம்பிக்கை வைத்திரு. ஒரு மேன்மையா தோற்ற மதிப்பைப்  பெறவேண்டும் என்பதற்காக உன்னை விட்டு வெளியே போகாதே. ஒரு   போலியாக இருக்காதே”. என்றும் கூறுவார்.
இப்படியெல்லாம் சொன்னவர் யார் தெரியுமா?. புரூஸ் லீ தான்.

இவர் பூர்வீகம் சீனாவின் ஹாங்காங் .அமெரிக்காவில் சான்பராஸ்சிஸ்கோ நகரில் 1940 ல் நவம்பரில் பிறந்தார். தற்காப்புக் கலையில் உலகில் மிகச் சிறந்த கலைஞ்ராகத் திகழ்ந்தார். சண்டையிடும் முறை ஒரு புதியதாக இருந்ததால் இவருடைய திறமையை அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர் தந்தையால் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானார். தன் 18 வது வயதில் அமெரிக்காவிற்குப் பயமானார். அங்கு மேற்படிப்பைத் தொடர்ந்தார். அப்போது ற்காப்புக் கலை பற்றி சக மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதுவே அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1973 ல் ஹாங்காங்கில் இறந்தார். வாழ்க்கை என்பது ஒருவன் தன் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்திக் காட்டுவதுதான் என்பதை உலகிற்கு சொல்லாமல் சொல்லிச் சென்ற மா மனிதன். இவரைப்போல இன்னொரு மனிதன் பல ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறப்பான்.

No comments:

Post a Comment