Saturday, October 26, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-பராசியோடைமியம் -கண்டுபிடிப்பு 
ஸ்வீடன் நாட்டின் மொசான்டெர் 1841 ல் அருமண் உலோகமான
லாந்தனத்தின் ஒரு னிமத்திலிருந்து டிடைமியா என்று பெயரிட்ட ஒரு பொருளைப் பிரித்தெடுத்தார்.இது முதலில் ஒரு புதிய அருமண் உலோகத்தின் ஆக்சைடு எனக் கருதப்பட்டது.1879 ல் பாய்ஸ்
பௌட்ரன் என்ற பிரான்சு நாட்டு அறிர் சாமார்ஸ்கைட் என்ற னிமத்திலிருந்து பெறப்பட்ட டிடைமியாவிலிருந்து சமேரியா என்ற புதிய அருமண் சேர்மத்தைப் பெற்றார்.1885 ல் வான்வெல்ஸ் பேக் என்ற ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி டிடைமியாவை ராசியோடைமியா,
நியோடைமியா என்று இரு அருமண் உலோக வகையினைப் பிரித்தெடுத்தார்.இவை ஒன்றுபோல இருப்பினும் இவற்றின் உப்புக்கள் வெவ்வேறு நிறமுடையவைகளாக இருந்தன.
பராசியோடைமியம் நிறமாலையின் பச்சை நிறப்பகுதியில் வரிகளைக் கொண்டுள்ளது.கிரேக்க மொழியில் ராசியோஸ் என்றால் பச்சை நிறம் என்று பொருள்.டைமியம் என்றால் இரட்டை.அதனால் இப் புதிய அருமண் உலோகங்கள் டைமியம் என்ற பின்னொட்டைப் பெற்றன.இது ஏறக்குறைய அருமண் உலோகங்கள் அனைத்திற்கும் கனிமமாக இருக்கும் மொனோசைட்,பாஸ்ட்னாஸைட் போன்றவற்றில் சிறிதளவு கிடைக்கின்றது. அயனிப் பரிமாற்றம்,கரைசல் பிரிப்பான்  நுட்பம் மூலம் அருமண் உலோகங்களை மிக எளிதாகப் பிரித்தெடுக்கலாம்
பண்புகள் 
Pr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பராசியோடைமியத்தின் அணுவெண் 59 ,அணு எடை 140.91 அடர்த்தி 6780 கிகி/கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 1213 K, 3273 K ஆகும்  
நிறமாலையில் இதன் வரிகள் கத்தி விளிம்பு போன்று மிகவும் குறுகளாக இருக்கின்றது. உட்கவர் பட்டையின் அகலம் ஒரு சில ஆங்க்ஸ்ட்ராம் மட்டுமே (1 ஆங்க்ஸ்ட்ராம் = 10 -10 மீ ).பாரசியோடைமியம் மென்மையாகவும் வெள்ளி  போன்ற தோற்றப் பொலிவும்  கொண்டுள்ளது.இதை கம்பியாக நீட்டவும்,தகடாக அடிக்கவும் முடிகின்றது .இது
ரோப்பியம்,லாந்தனம்,சீரியம்,நியோடைமியத்தை விட அரிமானத் தடையை மிகுதியாகப் பெற்றுள்ளது ஆனால் காற்று வெளியில் பச்சை நிறத்தில் இதன் ஆக்சைடு புறப்பரப்பில் படிகின்றது. அதனால் பிற அருமண் உலோகங்களைப் போல ,இதை மண்ணெண்ணை போன்ற ஆக்ஸிஜன் இல்லா ரி நீர்மத்தில் முக்கி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கின்றது. இதை நெகிழ்மத்தினுள்ளும் புதைத்து வைக்கலாம்.
பயன்கள் 
உயர் வெப்பநிலைப் பயன்பாட்டிற் குறிய பீங்கான்களில் இதன் ஆக்சைடு பயன் படுகின்றது.திரைப்படங்களைத் திரையிடுவதற்குத்தேவையான கார்பன் மின் விளக்குகளில் பாரசியோடைமியம் பயன்தருகின்றது.

இதன் சில உப்புக்கள் கண்ணாடி மற்றும் எனாமல்களில் வண்ணமூட்டப் பயன்படுத்துகின்றார்கள். கண்ணாடிகளில் பொதுவாக இது மஞ்சள் நிறம் தருகின்றது .தொலைக் காட்சிப் பெட்டிகளில் கருஞ் சிவப்பு வண்ணத்திற்கான ஒளிர் பொருட்களில் இது பயன்படுத்தப்படுகின்றது

No comments:

Post a Comment