Friday, October 11, 2013

vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-லாந்தனம்-தொடர்ச்சி
பயன்கள்
 கார்பன் ஒளி விளக்குகளின் செயல்பாட்டில் லாந்தனம் சேர்ந்த சில கூட்டுப் பொருட்கள் பயன்படுகின்றன..இது திரைப்படம் காட்டும் திரையரங்குகள்,படப்பிடிப்பு நிலையங்கள்,தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள்,காட்சி மேடை,பொருட்காட்சி அரங்கங்கள் போன்றவைகளுக்கு பிரகாசமான ஒளியைத் தருகின்றது. கண்ணாடியில் லாந்தனம் ஆக்சைடைச் சேர்க்க அது காரத்திற்கு கண்ணாடியின் எதிர்ப்பை மேம்படுத்துகின்றது
உயர் வெப்பநிலை மீக்கடத்தி(High temperature superconductor) 
மீக்கடத்திகளின் மின் தடை சுழி என்பதால் மின்னாற்றல் இழப்பு சிறிதும் இல்லை. உயர் காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கவும்,சாதனங்களின் கட்டமைப்பை நுண்மையாக்கிக் கொள்ளவும் இது வழி செய்கின்றது. ஆனால் மீக்கடத்திகள் பொதுவாக தாழ்ந்த வெப்ப நிலைகளில் ஏறக்குறைய தனிச்சுழி வெப்ப நிலைக்கருக்காமையில் செயல்படுவதால் அத்தாழ்ந்த வெப்ப நிலையைப் பெறவும்,தக்கவைத்துக் கொள்ள தகுந்த வெப்பக் காப்பீடு செய்யவும் தேவையானது. இதனால் உயர் வெப்ப நிலையில் மீக்கடத்தும் பொருளைக் கண்டறி வேண்டிய அவசியம் எழுந்தது. இவ்வாய்வுகளில் இன்றைக்கு லாந்தனம் முக்கிய மூலப் பொருளாக உள்ளது.
1986 ல் 37 K பெயர்ச்சி வெப்பநிலை கொண்ட லாந்தனம்,ஸ்ட்ரான்சியம் மற்றும் செம்பு இவற்றாலான சிக்கல்; படிக்கத்த்தை ஆக்ஸிஜன் வெளியில் படிக வளர்ச்சி செய்து உருவாக்கினார்கள். இதன் பிறகு சீன நாட்டு விஞ்ஞானிகள் லாந்தனம்-யம்-செம்பு ஆக்சைடுகளால் ஆன
எண்முகங்  கொண்ட சிக்கல் படிகத்தை உருவாக்கி பெயர்ச்சி வெப்பநிலையை 77 K வரை உயர்த்தினர். La-Ba-Cu-O மீக்கடத்தியின் மீது அழுத்தத்தைச் செயல்படுத்த அதன் பெயர்ச்சி வெப்ப நிலை குறிப்பிடும் படியாக அதிகரிக்கின்றது. அழுத்தத்தினால் பெயர்ச்சி வெப்ப நிலையை 40 முதல் 57 K வரை அதிகரிக்க முடிகின்றது. பெரிய பேரிய அணுவிற்குப் பதிலாகச்
சிறிய ஸ்ட்ரான்சிய அணுவைப் படிகக் கட்டமைப்பில் உட்புகுத்தினால் அழுத்தம் ஏதும் செயல் படாமலேயே 40 K பெயர்ச்சி வெப்ப நிலையைப் பெற முடிகின்றது. இச் சேர்மப் பொருட்களில் மீக் கடத்தும் ன்மை  La2CuO4 ல் உள்ள செம்பு அயனியின் இணைத்தினோடு தொடர்புடையதாக இருக்கின்றது ,இதில் செம்பு +2 என்ற இணை திறன் நிலையில் உள்ளது. பேரியம் அல்லது ஸ்ட்ரான்சியத்தை இதில் சேர்க்கும் போது அவை சில செம்பு அணுக்களை +3 என்ற இணைதி நிலைக்கு உந்தித்  தள்ளுகின்றது.அதனால் செம்பிற்கு ஒரு கலப்பு இணைதிம் கிடைக்கின்றது.இது ஆக்ஸிஜன் குறைவிற்கு வழி வகுக்கின்றது. தக்க தயாரிப்பு வழிமுறையைப் பின்பற்றி ஆக்ஸிஜன் வெற்று இட உருவாக்கத்தைப் குறைப்பதினால் பெயர்ச்சி வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகும்
CU 3+ நிலையை அமைப்பில் பாதுகாக்க முடியும்.
லாந்தனம் மற்றும் அதன் சேர்மங்கள் மெல்லிய ச்சுத் ன்மை கொண்டுள்ளன என்பதால் அவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும் 

No comments:

Post a Comment