Monday, October 14, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -சீரியம்-கண்டுபிடிப்பு

அருமண் தனிமங்களுள் அதிகச் செழுமையுடன் கிடைக்கும் தனிமம் சீரியமாகும்.1803 ஆம்  ஆண்டில் கலாப்ரோத் மற்றும் பெர்சிலியஸ் போன்ற வேதியியலாரால் தனித்தனியாகக் கண்டு பிடிக்கப்பட்டது.1801 ல் செவ்வாய்க்கும்,வியாழனுக்கும் டையே சீரெஸ் என்ற குறுங்  கோள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் வியப்பு அறிவியலாரிடையே ஏற்பட்டதின் பிரதிபலிப்பினால் அத் தனிமம் அப்பெயர் பெற்றது. இத் தனிமத்தின் முதன்மைக் கனிமங்கள் மொனோசைட்(Monazite) மற்றும் பாஸ்ட்னாசைட்(bastnasite) ஆகும்.மொனோசைட் மணலில் ஏறக்குறைய னைத்து அருமண் உலோகங்களும் கிடைக்கின்றன. இது அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை, பிரேசில் மற்றும்
இந்தியாவின் ஆற்றங் கரைகளில் கிடைக்கின்றது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் பாஸ்ட்னாசைட் பெருமளவு கிடைக்கின்றது.1803 ஆம் ஆண்டில் கலாப்ரோத் மற்றும் பெர்சிலியஸ் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் சீரியம் தூய உலோக நிலையில் 1875 ஆண்டு வரை பிரித்தெடுக்கப்படவில்லை. ஹில்லிபிராண்டு மற்றும் நோர்டன் என்ற வேதியியலார் இவ்வுலோகத்தை வெற்றிகரமாகப் பிரித்துக் காட்டினர்.இது இரும்பு போன்று சாம்பல் நிறமுடையது.தகடாக அடிக்கவும் கம்பியாக நீட்டவும் முடிகின்றது.

பண்புகள்
இதன் அணுவெண் 58. அணு நிறை 140.12. Ce என்ற வேதிக் குறியீட்டைப் பெற்ற இதன் அடர்த்தி 6771 கிகி/கமீ ஆகும். உருகு நிலை 1077 K ,கொதி நிலை 3173 K அருமண் உலோகங்களில்
ரோப்பியம் தவிர மிகவும் வீரியமிக்கது. சூடுபடுத்தப்பட்ட நீரில் உடனடியாக
ஆக்ஸிஜனேற்றம் பெறுகின்றது .இதை சுரண்டும் போது ஏற்படும் வெப்பத்தினால் காற்றில் தானாக எரியும் தன்மை கொண்டுள்ளதால் இதைக் கவனமாகக் கையாளவேண்டும் 
சீரியம் மாறுபடும் எலெக்ட்ரான் கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றது..இதில் 5s,5p புறக் கூடுகள் எலெக்ட்ரான்களால் முழுமையாக நிரப்பப் பட்டிருந்தாலும் 4f கூடு 2 எலெக்ட்ரான்களை மட்டுமே பெற்று முழுமைபெறாமல் இருக்கின்றது. அதாவது 4f எலெக்ட்ரான்களின் ஆற்றல் புறக்கூடு எலெக்ட்ரான்களுக்கு ஏறக்குறைய சமமாக இருக்கின்றது. எனவே மிகச் சிறிதளவு ஆற்றல்
இவ்வெலெக்ட்ரான்களை இடமாற்றம் செய்யப் போதுமானதாக இருக்கின்றது.இது சீரியத்திற்கு 3 அல்லது 4 என இரட்டை இணை திறத்தைத் தந்துள்ளது.
சீரியத்தை உயரழுத்தம் அல்லது தாழ்ந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது அதன் இணைத்திறன் 3 லிருந்து 4 க்கு மாறுகின்றது. அதனால் அதன் பருமனில் 10 % மாற்றம் ஏற்படுகின்றது. தாழ்ந்த வெப்ப நிலையில் சீரியத்தின் செயல்பாடு மிகவும் சிக்கலானது.நான்கு
வேற்றுருக்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. றை வெப்ப நிலையில் ளி மண்டல அழுத்தத்தில் சீரியம் காமா சீரியம் ஆக உள்ளது. இதை -23oC வரை குளிர்வூட்ட பீட்டா சீரியமாக உருமாற்றம் பெறுகின்றது.-158oC வரை குளிர்வூட்ட ஆல்பா சீரியம் ஏற்படுகின்றது. இந்த உருமாற்றம் -196oC வெப்பநிலையில் முற்றுப் பெறுகின்றது. ஆல்பா சீரியத்தின் அடர்த்தி 8240 கிகி/ கமீ ஆக உள்ளது. உயர் வெப்ப நிலையில் 726oC டெல்டா சீரியம் தோன்றுகின்றது. வளிமண்டல அழுத்தத்தில் நீர்ம சீரியம் , உருகு நிலையில் திண் சீரியத்தை விட அடர்த்தி மிக்கதாய் இருக்கின்றது.குளிர்ந்த நீரில் மெதுவாகச் சிதைவுறுகின்றது.கொதி நீரில் இது விரைவாக நிகழ்கின்றது. காரக் கரைசல்களும் நீர்த்த மற்றும் அடர் அமிலங்களும் இவ்வுலோகத்தை விரைவாகப் பாதிக்கின்றன சீரிக் உப்புகள் ஆரஞ்சு-சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன. ஆனால் சிரஸ் உப்புகள் வெண்ணிறங் கொண்டுள்ளன.
பயன்கள் 
மிஷ்(Misch) கலப்பு உலோககத்தில் சீரிம் முக்கியப் பங்கு பெற்றுள்ளது. சிகரெட் பற்ற வைக்கும் எரிகல்லாலான விளக்குகளில் பயன்படுகின்றது. சீரிம் ஆக்சைடு பெட்ரோமாக்ஸ் ஒளி விளக்குகளுக்கான எரியாத ல் லைளைத் தயாரிக்கப் பயன்படுகின்றது. சீரிம் கூட்டுப் பொருட்கள் கண்ணாடி உற்பத்தியில் ஒரு மூலப் பொருளாகவும் நிம் நீக்கியாகவும் பயன் 

படுகின்றன.வில்லைகள் காமிராவின் கண்ணாடிப் பரப்புகளை மெருக்கூட்டி பளபளப்பூட்டவும் பயன் தருகின்றது.பெட்ரோலியம் சுத்திகரிப்பு முறையில் சீரிம்  ஒரு வினையூக்கியாகக் கொள்ளப் படுகின்றது.சீரிம் கூட்டுப் பொருள் ,லாந்தனம் கூட்டுப் பொருளைப் போல செறிவு மிக்க கார்பன் வில் விளக்குகளில் மின் முனைகளாகச் செயல்படுகின்றன.இது கலங்கரை விலக்கம் மற்றும் சினிமா காட்சிகளுக்கான வில்விளக்குகளில் பெரிதும் பயன்படுகின்றது.  

No comments:

Post a Comment