Friday, October 18, 2013

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
ஆன்மீகச் செயல்களில் தீட்டு என்பது பெண்களுக்கு ட்டுமே உரியது என்று சொல்லப்படுவது சரியா தவறா ?
இக் கேள்விக்கு ஒரு பழுத்த ஞானி பதில் சொல்லியிருக்கின்றார். ஆணாதிக்கத்தால் வந்த பெண்ணடிமை என்ற அடிப்படையில் பதில் சொல்லியிருக்கின்றார். 
ஆதிகாலத்தில் உடல்வலுவாக இருந்த காரணத்தினால் ஆணின் ஆதிக்கம் ங்கியிருந்தது மனரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் மக்கள் மட்டுமல்ல அரசர்கள்,மதகுருமார்கள் கூட கலங்கினார்களாம். அதனால்
பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதிகாலத்தில் இந்தத் தீட்டும் அப்படி உருவானதே பெண்ணடிமைத்தனம் என்பதும் ஆணாதிக்கம் என்பதும் இயற்கை எதிர்பார்க்கும் மனிதக் 
கடமைகளைப் புறக்கனித்தவர்கள் கூறும் வார்த்தைகள்.நமக்கு முன்பு பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து,வாழும் விலங்கினங்கள் யாவும் இத்தகைய கட்டுப்பாடுகளை இன்னும் மீறாமல் பின்பற்றி வருகின்றன
ஒரு விலங்கிற்கு காதல் உணர்வு ஆண்டு முழுவதும் நீடித்திருப்பதில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு அடங்கிப் போய் விடுகின்றது. ஆனால் மனிதர்கள் அப்படியில்லை. இயற்கை விதிகளை மீறிச் செயல்படும் உத்தமர்களாக இருக்கின்றார்கள். ஆண்களைக் கட்டுப்படுத்துவதற்கு உண்டானதே தீட்டு. கோயில்,ஆன்மீகம் என்பது இறைவன் மூலம் ஆன்மாவை உணர்தல் மட்டுமல்ல ,இல்லறத்தில் நல்லறம் காண்பதும் தான். அங்கே இனத்தின் சாகாமைக்கு இனப்பெருக்கம் வலியுறுத்திச் சொல்லப்படுகின்றது.

தீட்டு என்பது அசுத்த ரத்தம் வெளியேறுதல்.அப்படிப்பார்த்தால் அசுத்த நீர் வியர்வையாக வெளியேறுவதும் கூடத் தீட்டுதான்தீட்டுக் காலத்தில் உடலுறவு கூடாது என்பதை வழக்கமாக கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கம்.இதில் ஆணாதிக்கமோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை.ஆணும் பெண்ணும் இணைந்து பிள்ளை பெற்றுவிட்டால் அதை முதலில் பொறுப்போடு வளர்க்கும் பொறுப்பு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெண் மட்டுமே பெண்ணால் மட்டுமே பாலூட்டி வளர்க்க முடியும்.பெண்ணால் மட்டுமே தான் குழந்தையை 24 மணிநேரமும் பாதுகாப்பாய் வளர்க்க முடியும். விலங்கினங்களுக்கு ஒரு மனப்பான்மை மனிதர்களுக்கு ஒரு மனப்பான்மை என்றில்லை. விலங்கிலிருந்து பிறந்தவனே னிதன்.

No comments:

Post a Comment