Saturday, October 26, 2013

Vinveliyil Ulaa

 விண்வெளியில் உலாபிகாசஸ்(Pegasus) 
பறக்கும் பட்டம் போல நமக்குத் தோன்றுகின்ற இந்த விண்மீன் கூட்டம் பங்காலத்தினரால் பறக்கும் குதிரையின் மேற்புறப் பகுதியை நினைவூட்டுமாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளது.அரேபிய மொழியில் விலங்கின் மூக்கு என்ற சொல்லுக்கு இணையான சொல்லிலிருந்து பிகாசஸ் என்று இது பெயர் பெற்றது. பொதுவாக ஒரு கூட்டத்திலுள்ள விண்மீன்களை அவற்றின் பிரகாசத்தின் அடிப்படையில் வரிசைப்படுதித்தி கிரேக்க மொழி ழுத்துளின் அகர வரிசைப்படி (ஆல்பா,பீட்டா,காமா....) அடைமொழி வழங்கியுள்ளனர். இதன்படி ஒவ்வொரு கூட்டத்திலும் ஆல்பா விண்மீன் பிரகாசமிக்கதாகவும் அடுத்து பீட்டாவும் அதற்கடுத்து காமாவும் பிரகாசமிக்கதாக இருக்குமெனலாம்.ஆனால் தொலை நோக்கியால் நுட்பமாய் கண்டறிவதற்கு முன்னரே பெயரிடப்பட்டதால் ஒரு சில விண்மீன் கூட்டங்களில் இது தவறாகவும் மைந்தது.அதிலொன்று இந்த பிகாசஸ் வட்டார விண்மீன் கூட்டம். மார்ஹாப் எனப் பெயரிடப்பட்ட ஆல்பா பிகாஸியை விட ஸெப் என்ற பீட்டா பிகாஸி பிரகாசமானது. அதைவிட எனிப் எனப் பெயரிடப்பட்ட எப்சிலான் பிகாஸி இன்னும் பிரகாசமானது. எப்சிலான் பிகாஸிக்கு வலப்பக்கமாக சற்று மேலாக இவ்வட்டார விண்மீன்களின் பல விண்மீன்கள் மைந்துள்ளனபிகாசஸ் வட்டார விண்மீன் கூட்டத்தின் தனிச் சிறப்பு அதில் காணப்படும் சதுர வடிவத் திட்டாகும் இது பிகாசஸ் வட்டார விண்மீன் கூட்டத்திலுள்ள ஆல்பா,பீட்டா,காமா விண்மீன்களுக்கும் ஆன்ரோமெடா விண்மீன் கூட்டத்திலுள்ள ஆல்பா விண்மீனும் சேர்ந்து உருவானதாகும் இதன் பரப்பில் வெறும் கண்களுக்கு 4 என்ற ளிப் பொலி வெண்ணுக்கும் குறைவான ளிப்பொலிவெண்ணுடைய அல்லது பிரகாசமிக்க விண்மீன்கள் ஏதும் தென்படவில்லை.
இந்த விண்மீன் கூட்டத்தைப் பற்றி கிரேக்க  புராணத்தில் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது.
சீடெஸ் என்ற திமிங்கிலத்தால் கவ்விப் பிடிக்கப்பட்டு அதன் தாடைகளுக்கிடையில் சிக்கியிருந்த ஆன்ரோமெடா என்ற இளவரசியைக் காப்பாற்றுவதற்காக பெர்ஸியஸ் என்ற வீரனால் மெடுசா என்பவனின் தலை வெட்டப்படும்போது அவளுடைய உடலிலிருந்து துள்ளி எழுந்ததுவே இந்த இறக்கையுடன் கூடிய குதிரை என்று அதில் விவரிக்கப்பட்டுள்ளது
மார்ஹாப் (Markab) என்றழைக்கப்படும் 140 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஆல்பா பிகாஸி இக் கூட்டத்தில் மூன்றாவது பிரகாசமான விண்மீன். இதன் தோற்ற மற்றும் சார்பிலா ளிப் பொலி  வெண் முறையே 2.49, 
- .67 ஆகும். இரண்டாவது பிரகாசமான பீட்டா பிகாஸி சுமார் 199 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்ற சூயிட்(Scheat) என்றழைக்கப்படுகின்ற ஒரு பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாகும்  இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் ஓர் லைவு கால முறை ஏதுமின்றி 2.3 முதல் 2.8 வரை மாறி மாறிப் பிரகாசிக்கின்றது. இதன் பிரகாச மாற்றத்தை தெரிந்த எந்த இயற்பியல் விதியாலும் நிறுவமுடியாததால் இது மாறொளிர் விண்மீன்களுள் ஒரு புது வகையாக உள்ளது. இவ்வகை 
மாறொளிர் விண்மீன்களில் புறப்பரப்பு வெப்ப நிலையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வுகள் அதன் வளி மண்டலத்தின் ஒளி உட்புகு தன்மையில் உணரத்தக்க ஒரு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றது .ரளவு குளிர்ச்சியான இதன் வளி மண்டலத்தில் டைட்டானியா சேர்மானமுள்ள மேகங்கள் இருக்கலாம் என்றும் இதன் ஒளியியல் பண்புகள் ,குறிப்பாக ஒளி ஊடுருவும் தன்மை வெப்பநிலையில் ஏற்படும் மிக நுண்ணிய அளவு ஏற்றத் தாழ்வுகளுக்கு உணர்வுநுட்பமுடையானவாக இருக்கின்றன என்றும் நவீன வானவியலார் கருதுகின்றார்கள்

  

No comments:

Post a Comment