Wednesday, October 30, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
அரசு இயந்திரம் பழுதுபட்டு மக்களின் நலனுக்காகச் செயல்படாத நிலை தொடரும் போது அதிருப்தி டையும் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பதோடு சிலர் அரசுக்கு எதிராகச் செயல்படவும் துணிவு கொள்கின்றார்கள் .சிலர் தங்கள் சமுதாயக் கடமைகளை செவ்வனே செய்வதில்லை.

அரசை மாற்றுவதால் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று தவறா நம்பி மீண்டும் மீண்டும் ஏமாந்து போவது பொது மக்களே. இதற்குக் காரணம் அரியணையில் அமரப்போகும் அரசியல் வாதியை அவர்களால் மாற்ற முடிவதற்கு இருக்கும் குறுகிய வாய்ப்புக் கூட அரசியல்வாதிகளின் குறுகிப் போன மனத்தை மாற்றுவதற்க்கு சிறிதும் வாய்ப்பு இல்லாதிருப்பதேயாகும்..அதுமட்டுமன்று மற்றவர்களிடம் என்ன எதிபார்க்கின்றோமோ அது நம்மிடமும் இருக்க வேண்டும் என்ற கொள்கை மக்களிடம்  இல்லாததால் இது வெறும் ஊமைச்  சண்டையாகவே வந்து வந்து போகின்றது
அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மக்களை ஏமாற்ற ஏமாற்ற மக்களும் அரசுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கை சிறிது சிறிதாக இழந்து விடுவார்கள். இதன் பரிணாம வளர்ச்சி மிகவும் மோசமானதாகத் தான் இருக்கும். அதற்கான அறிகுறிகள் இப்போதே சமுதாய வீதியில் தென்பட ஆரம்பித்து விட்டன.  எனினும் இந்த நிலையை அரசியல்வாதிகள் தங்களின் உண்மையான  அகத்  தோற்றத்தை மூடி மறைக்கவே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மக்களோ அரசியல் வாதிகளைக் குறை கூறிக் கொண்டே தங்கள் நிலையைத் தவறான வழிகளில் உயர்த்திக் கொள்ள நினைப்பதும் இன்றளவும் தொடருகின்றது. இதன் வளர்ச்சி சமுதாயத்திற்கு பெரும் கேடாக அமையும். அரசியல் பகைமைகள் சாதிச் ண்டைகளாகவும், மதக் கலவரங்களாவும், தீவிரவாதப் போக்காகவும், பலவிதமாக வெளிப்பட்டுத் தோன்றும். அப்போது காவல் துறை இருக்கும் ஆனால் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. நீதித் துறை இருக்கும் ஆனால் சட்டமும் ஒழுங்கும் இருக்காது, லஞ்சம்,ஊழல் ஒழிப்புத் துறை இருக்கும் ஆனால் ஊழலும் லஞ்சமும் ஒழியாதிருக்கும்.மாணவர்களிடம் கல்வி இருக்கும் ஆனால் பண்பாடு,ஒழுக்கம் இருக்காது.மக்கள்  வாழ்வார்கள் ஆனால் சமுதாயம் வாழாதிருக்கும்.

No comments:

Post a Comment