Tuesday, October 8, 2013

Mind without fear

Mind without fear
ஒருவர் ஒரு கூட்டத்தில் சொல்லக் கேட்டு மனதைத் தீண்டிய இது ர் உண்மைக் கதை .பெரிய
மாற்றங்களை கேட்ட அக் கணத்திலேயே தூண்டிவிடக் கூடிய சிறு கதை.
யாதுகுல மேரி என்றொரு பெண் கேரளாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் ஒரே அண்ணனுக்குத் தங்கையாகப் பிறந்தார். இடைவெளி விட்டுப் பிறந்ததால் வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் இருக்கும்.அண்ணனுக்கு 20 வயதில் திருமணமான ஆன அந்த ஆண்டிலேயே மேரியின் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போயினர்.சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்த மேரி ண்ணனால் வளர்ந்தாள்- தங்கையாக இல்லை ஒரு வேலைக்காரியாக.பள்ளிப் டிப்பும் பாதியில் போனது..சீதனம் கொடுத்து அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பாத ண்ணிக்கு அண்ணனும் துணை நின்றான்.
அவள் 30 யும் தாண்டி வளர்ந்துவிட்டாள்.  அவள் ண்ணிக்கும் ண்ணனுக்கும் இரண்டாம் தாரம் தேடிக்கொண்டிருந்த 60 யைத் தாண்டிய ஒரு முதியவர் ஒரு புளியங்கொம்பாகக் கிடைத்தார்.பரிசையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு அவருக்கே மேரியை மணமுடித்து வைத்தனர். வேறு வழியில்லாத அப்பாவித் தங்கை அவருடன் வாழ்க்கைத் தொடரப் புகுந்த வீடு புகுந்தாள்.
முதியவருக்கு பல பிள்ளைகள். அவர்கள் எல்லோரும் திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் இருந்தனர். அவர்கள் விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்ததால்  புகுந்த வீட்டில் அவளுக்கு அமைதியும் வும் இல்லை. அங்கும் வேலைக்காரியாகவே நடத்தப்பட்டாள். மனிதனுக்கு வரும் முதுமை மனதிற்குள் இருக்கும் காமத்திற்கு வருவதில்லையே.மேரி ருவுமுற்ற நேரம் என்ன நேரமோ தெரியவில்லை, வயதான அவள் கணவர் இறந்து போனார். பிறகு அவளுக்கு அந்த வீட்டில் கொஞ்சம் கூட மரியாதை கிடைக்கவில்லை. கொடுமைகளைத் தாங்க முடியால் கைக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு கண்காணாத தேசம் நோக்கிப் புறப்பட்டாள். எப்படியோ பெங்களூரு வந்து சேர்ந்தாள். அங்கே அவளுக்கு ஒரு தேவாலயம் அடைக்கலம் கொடுத்தது.அங்கும் வேலைக்காரி வேலைதான். தனக்குக் கொடுக்கப்படும் உணவையும் சேர்த்து தான் பிள்ளைக்கே ஊட்டிவிடுவாள். வெறும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்ட காலம் எவ்வளவோ.இப்படி சில ஆண்டுகள் டின. ஒரு சமயம் ஓர் LIC அதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் பெண்களை முகவராக பணியாற்ற வாய்ப்பளித்தார். மேரிக்கு அதில் அதிகமாகத் தெரியாது என்றாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ர் உறுதியான தீர்மானத்தில் அப் பணியைச் சவாலாக ஏற்றுக் கொண்டார்.ஊர் ஊராகப் பயணம் மேற்கொண்டாள். பல வாடிக்கையாளர்களைச் சேர்த்தாள்.நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ ஒரு சில ஆண்டுகளிலேயே மேரியே அதிக வருவாய் ட்டித் தந்த முதன்மை முகவராகத் திகழ்ந்தார். அதனால் அவள் பணி நிலையும், பொருளாதார நிலையும் உயர்ந்தது. தன் மகளை உயர் கல்வி படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாள். அவளை ஒரு கலக்டருக்குத்தான் மணமுடிப்பேன் என்று உறுதியாக இருந்து அப்படியே நடத்தியும் காட்டினாள் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மேரி.
மன உறுதியும் தைரியமும் இருந்தால் எதையும் சந்தித்து சாதிக்கலாம் என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உண்மை நிகழ்வு இருக்க முடியாது. விதியையும் மாற்றிமைக்க தி வேண்டாம் மனதில் உறுதி இருந்தால் போதும் என்பதை உலகிற்குத் தெரிவித்துக்கொண்டிருக்கும்

ளொரு சாதனைப் பெண்ணி.

No comments:

Post a Comment