அறிக அறிவியல்
வெற்றிப் பாதையை ஒருவர் உண்மையாகத் திட்டமிட்டுக்
கொள்வாரானால் ,அவர் நிச்சியமாக அதிருஷ்டத்தையும் ,
மந்திர தந்திரங்களையும் நம்பிக் கொண்டிருக்கமுடியாது .
ஏனெனில் இவை ஒருபோதும் அவருடைய கட்டுப்பாட்டில்
அவருக்கு நன்மையோ ,தீமையோ செய்யமுடியாதவை .அதனால்
ஒருநேரத்தில் வேண்டுமென்று வரவழைக்கவும் ,மற்றொரு
நேரத்தில் வேண்டாமென்று தடுத்துக் கொள்ளவும் முடிவதில்லை.
புறச் சூழல்கள் ஒருவருக்குச் சாதகமாக அமையும் போது
இவை எதிர்பாராத விதமாக விளைகின்றன .
கடவுளை விழுந்து விழுந்து வேண்டியதாலும் ,அதற்காக
உடலை வருத்திக் கொண்டாதாலும் இது கிடைத்தது போலத்
தோன்றினாலும் ,உண்மையில் அது உன்னையும் அறியாமல் உன்
முயற்சியால் கிடைத்ததுதான் .ஏனெனில் கடவுள் என்பது
மூன்றாவது மனிதனில்லை .அவர் எதைச் செய்ய விரும்பினாலும்
அதை உன்மூலமாகத்தான் செய்தாகவேண்டும் . அதாவது அவருடைய
கருவி மனிதர்களே .கடவுள் என்பது மனிதனின் அகத்தைத் தூண்டும்
ஒரு தூண்டுகோல் .
வெற்றியை அடைவது என்பது உண்மையான நோக்கமானால் .
அதற்கு ஒருவர் தன்னிடமுள்ள தனித் திறமைகளை இனமறிந்து வெளிக்காட்டவும் அதை வேறுபடுத்தி மேம்படுத்தவும் வேண்டும்.
சிலர் அப்படித் தனித்திறமைகள் ஏதுமின்றி பொருளாதாரத்தால்
வளர்ச்சி பெற்றிருக்கலாம் .ஆனால் அவர்களெல்லாம் வெற்றிபெற்றவர்களில்லை,அவர்களுடைய அகங்காரம்,
மற்றவர்களுடைய வாய்ப்புகளை பறித்துக் கொண்டதால்
ஏற்படும் பொறாமை போன்றவைகள் அவரை பிற்காலத்தில்
அழித்துவிடும்.காலத்தால் அழியாத ,அளிக்க முடியாத புகழை
வென்றெடுத்தவர்களே உண்மையில் வெற்றிபெற்றவர்களாவர்.
**************
மிதவைக் குடையில் ஒரு துளை
அதிக உயரங்களிளிருந்தும் ,பறக்கும் விமானத்திலிருந்தும்
குதித்து பாதுகாப்பாக த் தரையிறங்க மிதவைக் குடை
(parachute) பயன் படுகின்றது .இராணுவ வீரர்கள் போர்க்
காலங்களில் எதிரியின் நாட்டில் இறங்கி ஊடுருவிச்
செல்ல இது அனுகூலமாய் இருக்கின்றது . இது சாகச
விளையாட்டாகவும் இன்றைக்கு அறிமுகமாகி
வளர்ந்து வருகின்றது. குதித்தவுடன் சரியான நேரத்தில்
இந்த மிதவைக் குடையை விரித்துக் கொள்வார்கள் .
அகன்ற பரப்பின் காரணமாக இது கீழிறங்கும் போது
ஏற்படுத்தும் உராய்வுத் தடை அதிகமாக இருப்பதால் ,
குடையுடன் பிணைக்கப் பட்டிருக்கும்
வீரர்கள் மெதுவாக த் தரை இறங்குவார்கள் .இந்த மிதவைக்
குடையில் குறைந்தது ஒரு செல் புழை (vent hole) இருக்கும் .
செல் புழையின் அவசியம் என்ன ?
******************
செல் புழை யற்ற மிதவைக் குடை கீழிறங்கிச்
செல்லும் போது ஒரு விதமான காற்றோட்டத்தை
ஏற்படுத்துகிறது . வளைபரப்புடைய குடையால்
உட்புறம் ஒரு சுழல்காற்று விளைவிக்கப்படுகிறது .
இதன் மையங்கள் மிதவைக் குடையின் எதிர் எதிர்
பக்கங்களில் மாறிமாறித் தோன்றுவதால் மிதவைக்
குடை அதற்கேற்ப அசைந்தாடுகிறது . விளிம்பு
வழியாக இக் காற்று கடந்து வெளியேறிச்செல்லும்
போது ,சுழல் காற்று மையத்தில் அழுத்தம்,
அவ்விடத்தின் காற்றுவெளியின் இயல்வெளி
அழுத்தத்தைவிட குறைவாகிறது . அப்போது
அசைந்தாடுவது தூண்டப்படுகிறது . இதன் வீச்சு கால
முறையுடன் அடுத்தடுத்து ஏற்படும் தாக்கத்தால்
அதிகரிக்கிறது . அதனால் செல்லும் திக்கு மாறுவதுடன்
பாதுகாப்பான தரையிறக்கமும் இயலாது போகிறது .
செல் புழைகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது ,அதன்
வழியாக இக் காற்று வெளியேறிச் சென்று விடுவதால்
சுழல் காற்று ஏற்படுவதில்லை .அதனால் அசைந்தாடுவதும்
பெரிதும் தடுக்கப்படுகிறது
No comments:
Post a Comment