வட்டார விண்மீன் கூட்டம் மாறாதிருப்பது எப்படி ?
சூரியனைப் போல எல்லா விண்மீன்களும் பலவகையான
இயக்கங்களுக்கு உட்பட்டு விண்வெளியில் நீந்திக்
கொண்டிருக்கின்றன . இடப்பெயர்ச்சி தரும் இயக்கங்களை
மட்டும் கருதினால், ஒரு விண்மீன் மற்றொரு
விண்மீனை விட்டு சராசரியாக 30 கி.மீ/வினாடி என்ற
வேகத்தில் விலகிச் செல்வதைக் குறிப்பிடலாம். சிலவற்றின்
சார்பு வேகம் அதாவது ஒன்றைப் பொறுத்து மற்றொன்றின்
வேகம் 250 -300 கிமீ /வி வரை இருப்பதுண்டு. இது தவிர
விண்மீன்கள் அடங்கிய அண்டமே ஒன்றை விட்டு மற்றொன்று
விலகிச் செல்வதும், அண்ட மையத்தைப் பற்றி விண்மீன்கள்
சுற்றி வருவதும் இடப்பெயர்சிக்குக் காரணமாகின்றன.
ஒரு விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்களெல்லாம் இப்படி இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் போது அவை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் ,ஒரு குறிப்பிட்ட திசையில் நெடுங்காலம்
மாறாதிருப்பவை போலத் தோன்றுவது எப்படி ?
வினாடிக்கு 30 கிமீ வீதம் விலகிச் செல்லும் ஒரு விண்மீன்
ஓராண்டு காலத்தில் சற்றேறக் குறைய 100 கோடி கிமீ
தொலைவு கடந்து சென்றிருக்கும் .எனினும் 4 .2 முதல் பல
கோடிக் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில்
(ஒளி ஆண்டு என்பது ஒளி ஓராண்டில் கடக்கும்
தொலைவாகும். இது 9 .5 இலட்சம் கோடி கிமீ க்குச் சமம் )
உள்ள விண்மீன்களுக்கு இது 0.0001ஒளி ஆண்டுகளே. இந்த
இடமாற்றம் நெடுந்தொலைவிலுள்ள அவற்றின் அமைவிடத்தை
வேறுபடுத்திக் காட்டுவதற்குப் போதுமானதாக இல்லை.
அதனால் வட்டார விண்மீன்களை நெடுங்காலம் கட்டமைப்பில் மாற்றமின்றி காணமுடிகிறது. வட்டார விண்மீன் கூட்டங்களும்
கற்பனை உருவங்களும் விண்மீன் கூட்டங்களையும் ,அவற்றின் கட்டமைப்பில் இடப்பெற்றுள்ள விண்மீன்களையும்
இனமறிய ஒருவர்க்கு ஓரளவாவது கற்பனை வளம்
வேண்டும் .வட்டார விண்மீன் கூட்டம் என்பது ஒரு
குறிப்பிட்ட திசையில் விண்வெளியில் பார்ப்பதற்கு
ஓரளவு அருகருகே இருக்குமாறு தோன்றுகின்ற விண்மீன்களே
ஆகும் .
ஒரு வட்டாரத்திலுள்ள விண்மீன்களைப் புள்ளியாகக் கொண்டு, கற்பனையாக வானத்தில் ஒரு கோலம் போட்டால் அது சற்றேறக் குறைய ஒரு குறிப்பிட்ட வடிவத்தை நினைவூட்டுவது
போலத் தோன்றும். அக் குறிப்பிட்ட வடிவமே அந்த வட்டார
விண்மீன் கூட்டத்திற்குச் சுட்டுப் பெயரானது.
விண்மீன்களைச் சுற்றி கோலமிடும்போது அவையாவும்
உருவத்தின் வரை கோட்டிலேயே அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. வரை கோட்டிற்கு உட்புறமாகவும் ,
வெளிப்புறமாகவும் ஒரு சில விண்மீன்கள் அமையலாம் .
ஓர் உருவத்தின் சில முக்கியப் பகுதிகளைச் சுட்டிக் காட்டுவது
போல அந்தவட்டார விண்மீன்களின் அமைப்பை
நமக்கு நாமே கற்பனை செய்து கொள்ள மனத்திரையில்
அதன் உருவம் எளிதாகத்தோன்றி மறையும். மேலும் இந்த உருவங்களுக்குத் துல்லியமாக எல்லைகளை வரையறை செய்ய முடியாது. ஏனெனில் அவை வெறும் மனவுருத் தோற்றங்களே .
தொடக்கத்தில் கிரேக்க புராணத்தில் வரும் கடவுள்களும் , கதாபாத்திரங்களும் வட்டார விண்மீன் கூட்டங்களின் உருவங்களாயின.பின்னர் வானத்தில் எல்லை விரிவடைந்து
வானவியல் வளர்ச்சி பெற்ற பொது, வேறு பல உருவங்களும்
இடம் பெற்றன .
பழங்காலத்திய சிந்தனையாளர்கள் 88 வகையான வட்டார
விண்மீன் கூட்டங்களை ஏற்படுத்தி நமக்குத் தெரிவித்துள்ளனர் .
அவற்றில் ஒரு சிலவற்றின் பெயர்களும் ,உருவங்களும்
பின்வருமாறு .
அர்சா மைனர் (சிறிய கரடி)
ஓரியன் (வேடன் )
டாரஸ் (காளை)
கானிஸ் மேஜர் (பெரிய நாய் )
கானிஸ் மைனர் (சிறிய நாய் )
டிராகோ (டிராகன் )
ஹெர்குலஸ் (ஹெர்குலஸ் வீரன் )
அக்வாரிஸ் (நீரூற்றும் இளைஞன் )
காப்ரிகார்நேஸ் (ஆட்டுடலும் மீன் வாலுமுடைய கலப்பு )
சக்கிடாரியஸ் (வில்லேந்திய குதிரை உடல் மனிதன் )
சக்கிட்டா (அம்பு )
டெல்பினஸ் (டால்பின் )
லீபெஸ் (முயல் )
எரிடான்ஸ்(அண்டவெளி ஆறு )
சீட்ஸ் (திமிங்கிலம் )
பிச்சாஸ் ஆஸ்ட்ராலிஸ் (தென்னக மீன் )
கொரொனோ ஆஸ்ட்ராலிஸ் (தென்னக கீரிடம் )
கொரொனோ பொரியாலிஸ் (வடக்கத்திய கீரிடம் )
அரா (பலி பீடம் )
சென்டாரஸ் (மனிதனும் குதிரையும் சேர்ந்த கலப்பு )
லூபஸ் (ஓநாய்)
ஹைட்ரா (பல தலை கொண்ட அரக்கன் )
கிராடர் (கோப்பை)
கோர்வஸ் (காக்கை )
லிப்ரா (தராசு )
கோமா பெரனிசஸ்(பெரனிஸ் என்ற எகிப்திய ராணியின் தலைமுடி )
க்ருக்ஸ் (சென்டாரசின் பின்னங்கால் )
ஈக்குலஸ் (சிறிய குதிரை )
ஒப்ஹிசூயஸ் (பாம்பாட்டி )
ஸ்கார்பியோ (தேள் )
விர்கோ (கன்னிப்பெண் )
ஜெமினி (இரட்டையர் )
கான்செர் (நண்டு )
லியோ (சிங்கம் )
ஔரிகா (தேரோட்டி )
சிபினேஸ்(கடலரக்கன் )
காசியோப்பியா (கசியோப்பியா என்ற ராணி )
ஆண்ட்ரோமெடா(அன்றோமெடா என்ற இளவரசி )
பிகாசுஸ் (பறக்கும் குதிரை )
எரிஸ் (ஆடு )
ட்ரை யான்குலம் (முக்கோணம் )
பிச்சஸ் (மீன்கள் )
பெர்சியஸ் (கிரேக்க வீரன் )
லைரா (யாழ் )
சைக்னஸ் (அன்னம்)
அக்குயிலா (கழுகு)
கானிஸ்வெனாடிசி (வேட்டை நாய் )
காமெலோபார்டாலிஸ் (ஒட்டகச் சிவிங்கி )
சிபெஸ் (சிபெஸ் என்ற அரக்கன் )
க்ரூஸ் (நாரை )
ட்ரஸ் (சிறிய நீர் பாம்பு )
பெனிக்ஸ் (பழங்காலத்திய பறவை )
பப்பிஸ் (கப்பல் )
சர்பென் (பாம்பு )
வுல்பிகுலா (நரியும் வாத்தும் )
துக்கனா(துக்கான் பறவை )
டெராடோ (கத்தி மீன் )
17 ம் நூற்ற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியர்களும் ,
ஆங்கிலேயர்களும் இத் துறையில் ஈடுபாடு காட்டிய
போது மேலும் பல புதிய வட்டார
விண்மீன் கூட்டங்களைக் கண்டறிந்தனர் .
good work. keep it going. thanks!
ReplyDelete