Wednesday, November 24, 2010

arika iyarpiyal-17

விமானம் தலைகீழாகப் பறக்குமா ?



பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று
சொல்வார்கள். பறப்பதற்கென உடல் வாகுவையும்
சிறகுகளாலான இறக்கைகளையும் பெற்றுள்ளன .
ஒரு பறவை பூமியைப் பார்த்தவாறு நேராகப் பறக்கும்
தலைகீழாகப் பறப்பதில்லை . எனினும் அடர்ந்த காட்டுப்
பகுதிகளில் மரங்களுக்கிடையே சாய்ந்தும் ,வளைந்தும்
பறக்கின்றன . ஹம்மிங் பறவை மட்டும்பின் நோக்கிப்
பறக்கும் திறமை கொண்டது .பறவையைப் பார்த்து
வடிவமைக்கப்பட்ட விமானம் தலைகீழாகவும் பறக்கவும் செய்கின்றன .இது எப்படி ?
                                          *****************


விமானத்தின் இறக்கை வெவ்வேறு வளைவாரங்களைக்
கொண்ட இரு வளைபரப்புகளைக் கொண்டது . போதிய
விசையை ஏற்படுத்துவதற்காக இப்படி வடிவமைக்கப் படுகிறது. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி மேல் நோக்கிச் செல்ல ,
ஏதாவதொன்றை கீழ் நோக்கி உந்தித் தள்ள வேண்டும் .
விமானத்தின் இறக்கை ஓரளவு சாய்வாகச் சரிந்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் ,காற்றின் ஊடாக விமானம் இயங்கிச் செல்லும் போது,காற்றைக் கீழ் நோக்கித் தள்ளுகிறது. அதன் எதிர் விசையால் விமானம் மேலுயர்ந்து செல்கிறது. பரப்பைத்
தழுவிச் செல்லும் காற்று அதை விட்டு விலகி ஒரு காற்றுச்
சுழலை ஏற்படுத்தும் வண்ணம் வளைபரப்பு சீராக உள்ளது .
பலவிதமாக இறக்கைகளைக் கட்டமைக்கமுடியும் .
இதிலொன்று இருபக்கமும் குவிபரப்புடையது . இதன் அடிப்பரப்பும் , மேற்பரப்பும் சமச்சீராக இருப்பதால் ,இது போன்ற இறக்கை
கொண்ட விமானங்களால் தலைகீழாகவும் இயங்க முடியும் .
அடிப்பரப்பு குழிந்துள்ள இறைக்கைகளைக் கொண்ட விமானம் தலைகீழாகப் பறக்க முடியாது .இறக்கை எவ்விதமாக
வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ,தலைகீழாகப் பறக்கக் கூடிய
விமானத்தின் வால் பகுதி ,தலைப் பகுதியை விடக் கீழே இருக்குமாறு பறக்க வேண்டும் .

No comments:

Post a Comment