Sunday, November 21, 2010

Vanna vanna ennangal-25

பாசிடிவ் திங்கிங்



இரு பிள்ளைகள் ஒரு தந்தைக்கு

இருவரும் இரட்டைப் பிறவிகள்

இதிலொருவன் நல்லவனாய் வாழ்ந்தான்

இன்னொருவன் தீயவனாய் வளர்ந்தான்



நல்லவனுக்கு............

நன்னூலால் நல்லறிவு மிகுந்தது

நற்பண்பால் நல்லொழுக்கம் மிளிர்ந்தது

சிந்தனையால் நல்லமனம் விரிந்தது

சீரிய நல்லெண்ணம் விளைந்தது

வந்தனையால் நல்வினை ததும்பியது

வாழ்வோருக்கு நல்லதே தந்தது

அறவினையால் நல்லவனும் செழித்தான்

அகன்ற நன்னிலமும் செழித்தது



கெட்டவனுக்கு..........

வன்நூலால் புல்லறிவு படர்ந்தது

வணங்காப்பண்பால் பொய்யொழுக்கம் தொடர்ந்தது

ஆசைகளால் கெடுமனம் அலைந்தது

கெட்டஎண்ணம் அங்கே ஆடியது

அழுக்காற்றால் தீவினையே பிறந்தது

அனைவருக்கும் பாதகமாய் இருந்தது

தீவினையால் கெட்டவனும் வீழ்ந்தான்

திக்கற்ற மாநிலமும் வீழ்ந்தது



வீட்டிற்கு வந்த விருந்தாளி ஒருவர்

விளக்கமறிய ஆவலுற்றார்

ஒரு தந்தைக்குப் பிறந்த இரட்டையர்

இப்படி இருப்பது எப்படி?



தீயவனாய் ஏன் வளர்கின்றாய் ?



தீயொழுக்கம் என்னிடம் வந்ததிற்கு

தீயொழுக்கம் மிக்க தந்தையே காரணம்

இப்படிதான் வாழவேண்டும் என்பதை

அவரிடமிருந்தே நான் கற்றேன்

அவரே எனக்கு வழிகாட்டி



நல்லவனாய் எப்படி

நல்லவனாய் எப்படி வாழ் கின்றாய் ?



நல்லொழுக்கம் என்னிடம் வந்ததிற்கு

தீயொழுக்கம் மிக்க தந்தையே காரணம்

எப்படி வாழக்கூடாது என்பதை

எந்நாளும் கற்றேன் அவரிடமிருந்து

அவரே எனக்கு வழிகாட்டி



ஒருவன் நல்லவனாய் வாழ்வதற்கும்

மற்றொருவன் தீயவனாய் வளர்வதற்கும்

உரிய காரணம் புறவெளியில் இல்லை

உள்ளத்தின் அகவெளியில் இருக்கிறது

நல்லதென்றும் கெட்டதென்றும் வகையில்லை

எல்லாம் எடுத்துக்கொள்ளும் விதம்தான் .

No comments:

Post a Comment