Friday, November 19, 2010

vanna vanna ennangal -24

தீபாவளித் திருநாள்






தீபாவளித் திருநாளாம்

தீபவொளியில் தீயவை எல்லாம்

தீய்ந்து போகும் நன்னாளாம்

தீண்டும் தீய எண்ணங்கள்

திரிந்து போகும் பொன்னாளாம்



அதிகாலையில் எழுந்து

அங்கம் குளிர எண்ணெய்தேய்த்து

அழுக்கு நீங்கக் குளித்து

புனித கங்கையில் நீராடிய

புத்துணர்வில் நிறைவாய் களிப்புற்றோம்



புத்தாடை உடுத்தி

புதுமையில்லா மரபு வழி

அருகிலுள்ள ஆலயம் சென்று

அருளும் ஆண்டவனைச் சந்தித்த

அன்பில் ஆனந்தக் கூத்தாடினோம்



விதவிதமாய் இனிப்புகள்

விதவிதமாய்ப் பல பலகாரங்கள்

வயிறு புடைக்க உண்டு

மருந்துக்கு முன் விருந்தென

பசியின்றி ருசித்துக் களைத்திருந்தோம்



வெடி வெடித்து

வீதியெங்கும் குப்பையிட்டோம்

விடுமுறை நாள் என்பதால்

தொலைக்காட்சிப் பேழைக்கு

தொடர்ந்து தொல்லை கொடுத்தோம்

அனைவரும் ஒன்று கூடி

அரட்டை யடித்து சிரித்திருந்தோம்

தொலைபேசி மூலம் தொலைதூரம்

இதயங்களைப் பரிமாறி

இனிய உறவுகளைப் புதுப்பித்தோம்



ஆனாலும் அந்தப் பழைய அழுக்குகள்

எண்ணத்தில் அப்படியே இருக்கு

என்ன தீபாவளி இது !

ஆண்டில் ஒருமுறை சூரியோதையம்

பார்த்தோம் என்பதைத் தவிர !.

No comments:

Post a Comment