Monday, November 1, 2010

Eluthatha kaditham-

எழுதாத கடிதம்


அன்பார்ந்த நகராட்சி ,மாநகராட்சி தலைவர்களே ,ஆணையர்களே


ஒரு சொட்டு நீர் கூட வீணாகிவிடக்கூடாது என்று மழைநீர் சேமிப்பு

முறைகளில் மக்கள் ஆர்வப்படுமாறு கட்டாயப்படுத்தினோம் .ஒரு

யூனிட் மின்சாரம் கூட வீணாகிவிடக்கூடாது என்று குண்டு பல்புகளை

ஒழித்துக்கட்டினோம்.ஆனால் ஏனோ நமது அகக் கட்டமைப்புகளை

வளப்படுத்தி நிலைப்படுத்திக்கொள்ளும் ஆக்க முறைகளில் உண்மையான

ஆர்வம் கொள்ளா திருக்கிறோம் .விழிப்புணர்வு இல்லாததாலும் ,
 
அளவுக்கு மீறிய  சகிப்புத்தன்மையை அது இந்தியர்களின்
 
பொதுவுடைமை என மரபு வழியாக வளர்த்துக்கொண்டிருப்பதாலும்
 
இந்திய மக்கள் இதில் ஈடுபாடு கொள்ளதிருக்கிறார்கள்.

நாட்டின் அகக்கட்டமைப்பு சரியான முறையில் வளம்பெறாததால்,

அதன் பொருட்டு நாடு பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

நகரங்கள் தாறுமாறாக வளர்ச்சி அடைந்துவருகின்றன .இது நகரத்தின்

அழகை சீர்குலைக்கிறது .புதிய கட்டுமாணங்களை கட்டுப்படுத்தி

திட்டமிட்ட முறையில் விரிவடையுமாறு செய்யவேண்டும்.

கட்டடங்களுக்கு தர நிர்ணயம் ,எதிக்காலப் போக்குவரத்துக்கு

ஏற்றவாறு அகன்ற வீதிகள் ,வீதியோரங்களில்

 நடைபாதைகள் .ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள்

பூங்காக்கள் ,குளங்கள் ,பொதுக் கழிப்பிடங்கள் ,கழிவுநீர்

வாய்க்கால்கள் கலைக்கூடங்கள், பொதுவிடங்களில்

கலைநயம் மிக்க சிலைகள் , என நிர்மாணக் கட்டுப்பாடுகளைப்

பொது வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்

குழிகள் இல்லாத வீதிகளை ஏற்படுத்த வேண்டும் .வீதிகள்

பழுதுற்றால் அவற்றை அவ்வப்போது சீரபடுத்த ஓர் அமைப்பை

நிரந்தரமாக அமைத்துக் கொள்ளவேண்டும்

வீதிகள் பழுதுற்றால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தங்கி

அதை மேலும் பழுதுபடுத்தும் .செல்லும் வாகனங்கள்

விலகிச் செல்ல முயல்வதால் விபத்துகள் ஏற்படுவது

தவிர்க்க இயலாத தாகின்றது .வாகனங்களின் தேய்மானம்

அதிகரிக்கிறது .இதனால் ஏற்படும் இழப்புகள் ,மீண்டும் வீதியை

செம்மைப்படுத்த ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம்

என்பதை வெகு சிலரே அறிவர்.இதனால் நாடு ஒவ்வொரு

ஆண்டும் பெரும் இழப்பை பெறுகிறது. .இந்த இழப்புகள்

இல்லாதிருந்தால் நாட்டின் அகக் கட்டமைப்பை

மேம்படுத்தக் கிடைக்கும் நிதி பற்றாக்குறையாக இருக்கவே

இருக்காது.உள்நாட்டின் தேவை அதிகமாகி விட்டால் .டயர்

போன்ற உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல்

வருவாய் இழப்பு வேறு ஏற்படலாம் .தேவையைத்

தேவையில்லாமல் ஏற்படுத்தி ,அதற்கேற்ப பொருட்களை

உற்பத்தி செய்வதால் தேவைக்குத் தேவையான பொருட்களை

உற்பத்தி செய்யமுடியாது போய்விடுகிறது.  அதனால் புதுமைப்

படைப்புகளைப் படைக்கமுடியாது பொருளாதார அரங்கில்

பின்தங்க நேரிடுகிறது. .இதுவும் நாட்டுக்கு ஏற்படும் இழப்பாகும்.

எனவே சாலைகளைச் சரியாகப் பராமரியுங்கள் .எளிதில்

பழுதுபடாத சாலைகளை ஏற்படுத்துங்கள் .சீர்படுத்தப்பட்ட

சாலைகளை சரியாகச் சீர்படுத்தப் பட்டுள்ளதா

என்று கவனியுங்கள் .

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment