Sunday, November 21, 2010

aruka iyarpiyal

அறிக அறிவியல்


வெற்றிப் பாதையை ஒருவர் உண்மையாகத் திட்டமிட்டுக்

கொள்வாரானால் ,அவர் நிச்சியமாக அதிருஷ்டத்தையும் ,

மந்திர தந்திரங்களையும் நம்பிக் கொண்டிருக்கமுடியாது .

ஏனெனில் இவை ஒருபோதும் அவருடைய கட்டுப்பாட்டில்

அவருக்கு நன்மையோ ,தீமையோ செய்யமுடியாதவை .அதனால்

ஒருநேரத்தில் வேண்டுமென்று வரவழைக்கவும் ,மற்றொரு

நேரத்தில் வேண்டாமென்று தடுத்துக் கொள்ளவும் முடிவதில்லை.

புறச் சூழல்கள் ஒருவருக்குச் சாதகமாக அமையும் போது

இவை எதிர்பாராத விதமாக விளைகின்றன .



கடவுளை விழுந்து விழுந்து வேண்டியதாலும் ,அதற்காக

உடலை வருத்திக் கொண்டாதாலும் இது கிடைத்தது போலத்

தோன்றினாலும் ,உண்மையில் அது உன்னையும் அறியாமல் உன்

முயற்சியால் கிடைத்ததுதான் .ஏனெனில் கடவுள் என்பது

மூன்றாவது மனிதனில்லை .அவர் எதைச் செய்ய விரும்பினாலும்

அதை உன்மூலமாகத்தான் செய்தாகவேண்டும் . அதாவது அவருடைய

கருவி மனிதர்களே .கடவுள் என்பது மனிதனின் அகத்தைத் தூண்டும்

ஒரு தூண்டுகோல் .



வெற்றியை அடைவது என்பது உண்மையான நோக்கமானால் .அதற்கு

ஒருவர் தன்னிடமுள்ள தனித் திறமைகளை இனமறிந்து வெளிக்காட்டவும்

அதை வேறுபடுத்தி மேம்படுத்தவும் வேண்டும் .சிலர் அப்படித் தனித்

திறமைகள் ஏதுமின்றி பொருளாதாரத்தால் வளர்ச்சி பெற்றிருக்கலாம் .

ஆனால் அவர்களெல்லாம் வெற்றிபெற்றவர்களில்லை,அவர்களுடைய

அகங்காரம் ,மற்றவர்களுடைய வாய்ப்புகளை பறித்துக் கொண்டதால்

ஏற்படும் பொறாமை போன்றவைகள் அவரை பிற்காலத்தில்

அழித்துவிடும் .

காலத்தால் அழியாத ,அளிக்க முடியாத புகழை வென்ரெடுத்தவர்களே

உண்மையில் வெற்றிபெற்றவர்களாவர்.

வண்டிச் சக்கரம்


கன இரக வண்டிகளில் சக்கரங்களின் அகலம் அதிகமாக இருப்பதைப்

பார்க்கிறோம் .பந்தையக் கார்களிலும் ,வேகமாக ஓடும் மோட்டார்

சைக்கிள்களிலும் இது போன்ற சக்கரங்களைக் காணலாம் .

இவ் வாகனங்களில் சக்கரங்கள் அகன்றிருப்பதேன் ?
                                        ***************
 
.அகன்ற டயர்களில் அவை சாலையோடு தொடும் பரப்பு அதிகமாக


இருக்கும். வண்டியில் அதிகப் பளு ஏற்றியிருந்தால் ,ஈர்ப்பு விசை

கூடுதலாக இருந்தும் ,கூடுதல் பரப்பு காரணமாக அழுத்தம்

குறைவாகவே இருக்கும் .அதனால் டயர் வெடிப்பது

தவிர்க்கப்படுகிறது .( ஆணி கூர்மையாக இருப்பதால்

அழுத்தம் குறுகிய பரப்பில் அதிகமாகச் செயல்பட்டு மரம்

அல்லது சுவரில் ஆழமாக உட்செல்வதும் இதனால்தான் .)

No comments:

Post a Comment