Monday, November 8, 2010

eluthaatha kaditham-17

எழுதாத கடிதம் -17


அன்பார்ந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களே ,

நமஸ்காரம் .என் மகள் காரைக்குடியில் கழனிவாசல் பகுதியில்

ரிலையன்ஸ் கார்டன் என்ற பெயரிட்ட இடத்தில் ஒரு காலி

மனையிடம் ,ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினாள்.

இப்பொழுது அதை வாங்க அல்லது விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக

அறிகிறேன் .

முறையான ஆவணங்களின் அடிப்படையில் இடத்தைப் பத்திரப்

பதிவு செய்துகொண்ட ஒருவரிடமிருந்துதான் இந்த இடம்

மீண்டும் பத்திரப் பதிவு செய்யப்பட்டது . சர்வே செய்யும் போதும்.,

மனைகளாகப் பிரிக்கும் போதும் ,முதன் முதலாகப் பத்திரப்

பதிவு செய்யும் போதும் இதைத் தடை செய்யாமல் ,இடம் முழுவதும்

விற்று முடிந்து நீண்ட காலம் ஆனபிறகு இப்படிச் செய்வது மக்களுக்கு

அரசு பாதுகாப்பானதில்லை என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது .

ஏமாற்றியவர்கள் பலனை அனுபவிக்க ,ஏமாற்றப்பட்டவர்கள்

மேலும் மேலும் துயரப்படுகிறார்கள் .

இப் பிரச்னையை அப்படியே ஆறப்போட்டு விட்டால் அது தானாக

ஆறிவிடும் என்று வழக்கமாக நலுவிக்கொள்லாதீர்கள்.அதில்

உங்களுடைய மேலாண்மை வெளிப்படுவதில்லை .

உங்களுடைய அனுபவம் .சட்ட திட்டங்கள் .நிர்வாகம்

இவற்றைக் கொண்டு ,மேலும் காலம் தாழ்த்தாமல்

ஒரு முடிவுக்கு வாருங்கள். இதில் தவறு செய்தவர்கள் தப்பிப்

பிழைத்து சந்தோசமாக வாழ்கிறார்கள் ,ஆனால் தண்டனை என்னவோ

அப்பாவி மக்களுக்குத்தான் . எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள்

இதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி .வரைந்து ஒரு முடிவு

எடுக்குமாறு ,பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் .

அதனால் பதிக்கப் பட்ட மக்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்த

மன உளைச்சலிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறுவார்கள் .

நன்றி

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment