சுடு நீரும் குளிர் நீரும் உறைதல்
நீர் உறையும் கடுங் குளிர் காலத்தில் மூடியற்ற ,ஒரே மாதிரியான இரு மர
வாளிகளில் நீருற்றி,புற வெளியில் உறையுமாறு வைக்கப்படுகின்றன .ஒரு
வாளியில் சுடு நீரும் ,மற்றொரு வாளியில் குளிர் நீரும் இருப்பதாகக்
கொள்வோம்.இவற்றுள் எது முதலில் உறையும்? அல்லது இரண்டுமே ஒரே
சமயத்தில் உரையுமா ?
சில குறிப்பிட்ட சூழ் நிலைகளில் ,சுடு நீர் குளிர் நீரை விட விரைவாகக்
குளிர்வுற்று உறைகிறது. இது மர வாளிக்கு மட்டும் பொருந்தும்.
கடத்தும் திறன் மிக்க உலோகங்களாலான வாளிகளுக்கு பொருந்துவதில்லை .
மூடியற்ற மர வாளியில் உள்ள சுடு நீரின் மேற்பரப்பில் நிகழும் ஆவியாக்கமும்
அதைத் தொடர்ந்து நிகழும் குளிர்ந்த மேல் நிலை நீரும் ,சூடாக உள்ள
அடிநிலை நீரும் ஏற்படுத்தும் கலவையும் இங்கு முக்கியமாக குளிர்
வூட்டுதலுக்குக் காரணமாய் இருக்கின்றன.ஆவியாக்கமும் ,நீர்மச் சலனமும்
வெப்ப ஆற்றலை புற வெளிக்கு
விரைவாக எடுத்துச் செல்லும் வீதத்தில் முக்கியப் பங்கேற்றுள்ளன .
ஆனால் மரவாளிகளின் சுவர் பரப்பு வழியாகக்
கடத்திச் செல்லப்படும் வெப்பம் மிகவும் குறைவு. ஆவியாக்கம் மட்டுமே
குளிர்வூட்டுதலைப் பெற வேண்டி இருக்கிறது.
மேலும் சூடான நீரின் ஆவியாக்கத்தினால் அதிக அளவு நீர் மூலக்கூறு
வெளியேறிவிடுகின்றன. அதனால் குறைந்த
அளவு நீரையே உறைய வைக்க வேண்டியிருக்கிறது.
குளிர்வூட்டலில் ஆவியாக்கம் மூலம் ஏற்படும் நிறை இழப்பு
குறிப்பிடும்படியானது. எடுத்துக்காட்டாக நீரை 100 டிகிரி
செல்சியஸ் லிருந்து 0 டிகிரி வரை தானாகக் குளிரும் போது 16 %
நிறையை இழக்கிறது. இதை உறைய வைக்கும் போது
மேலும் 12 % நிறையை இழக்கிறது. எனவே மொத்த நிறை இழப்பு
{16 + 12 x (100 -16 )}/100 = 26 %
இது நம் அன்றாட வாழ்க்கைக் குரிய பயனை நல்கியிருக்கிறது .எ.கா.
காரை வெந்நீரால் கழுவக்கூடாது .ஏனெனில்
வெந்நீரால் கழுவ, அது குளிர் நீரை விட விரைவாக உறைந்து காரில் படிக்கிறது
No comments:
Post a Comment