வண்ணக் கலனும் சுடு நீரும்
எல்லா வகையிலும் ஒத்த இரு கொள்கலன்களில் சம அளவு சுடுநீர் எடுத்துக்
கொள்ளப்படுகிறது .ஆனால் ஒரு கலனின் புறப்பகுதி கறுப்பு நிறம் பூசப்பட்டும்
மற்றொரு கலனின் புறப்பகுதி வெள்ளை நிறம் பூசப்பட்டும் உள்ளது .தொடக்கத்தில்
சுடுநீரின் வெப்பநிலை இரு கலன்களிலும் சமமாக உள்ளது. நேரம் செல்லச் செல்ல
இக் கலன்களில் உள்ள சுடுநீரின் வெப்பநிலை எங்ஙனம் மாறும் ? அல்லது எக்கலனில்
உள்ள சுடுநீர் விரைவாகக் குளிரும் ?
ஒரு பொருள் கதிர்வீச்சினால் குளிர்வடையும் வீதம் என்பது அப்பொருளின் வெப்பநிலை
மற்றும் அதன் அகச் சிவப்புப் பண்பினைப் பொறுத்தது .கட் புலனறி ஒளியும் அகச் சிவப்புக்
கதிர்களைப் போல மின்காந்த அலைகளாக இருப்பினும் ,கதிர்வீச்சினால் குளிர்வடையும்
வீதம் இதனால் தீர்மானிக்கப் படுவதில்லை. நிறம் தவிர்த்த பிற கூறுகள் அனைத்தும் இரு
கலன்களுக்கும் சமமாக இருப்பதால் ,இரு கலன்களும் சமமாய் குளிர்வடைகின்றன.
.
அதே பண்பென்றாலும் நீர் மட்டும் தனித்தது
நீர் பனியாக உறையும் போது பருமப் பெருக்கமடைகிறது .இது போன்ற பண்பை சிலிகான் ,
ஜெர்மானியம் ,ஸ்டெர்லிங் சில்வர் கலப்பு உலோகம் ,ஈயம்-டின் -ஆண்டிமணி கலப்பு உலோகம்
போன்றவை பெற்றிருக்கின்றன .ஆனால் இவற்றிலிருந்து நீர் சற்று வேறுபட்ட பண்பைக் கொண்டிருக்கிறது . அது என்ன ?
நீரின் வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம் என்பது அதன் உறைநிலைக்கு வெகு அருகாமையில்
4 டிகிரி லிருந்து ௦ டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் போது ஏற்படுகிறது. இந்த
விரிவாக்கததினால் நீர் 11 % பெருக்கமடைகிறது. நீரால் அடைக்கப்பட்ட கலன்
உறையும் போது ,அதை வெடிக்கச் செய்ய இது போதுமானதாக இருக்கிறது
No comments:
Post a Comment