Wednesday, November 23, 2011

arika ariviyal

ஆலிவ் எண்ணையும் டின் பாத்திரமும்




டின் பூசப் பட்ட செம்பாலான பாத்திரங்களைச் சிலர் சமையல் பாத்திரங்களாகப்
பயன்படுத்துவர். இதயத்தின் இயக்கத்திற்கு உகந்தது என்று சமையலில் ஆலிவ்
எண்ணெயையும் பயன்படுத்துவர்.ஆலிவ் எண்ணையின் கொதி நிலை 573.2 K'
டின்னின் உருகு நிலை 505 K. ஆலிவ் எண்ணையின் கொதி நிலையை விடக்
குறைவு. அப்படி இருக்க டின்னால் ஆனா ஒரு சமையல் பாத்திரத்தில் ஆலிவ்
எண்ணையில் ஒரு உணவுப் பண்டத்தை வறுப்பது எங்ஙனம் சாத்தியப் படுகிறது ?

ஓர் உணவுப் பொருள் வறுக்கப்படும் போது ஆலிவ் எண்ணெய் கொதிப்பதில்லை .
மாறாக உணவுப் பொருளில் உள்ள நீர் கொதிக்கிறது .அந்த நீர் முழுவதும்
வெளியேறிய பின்னரே ஆலிவ் எண்ணையின் வெப்ப நிலை அதிகரிக்கும் .
எனவே உணவுப் பொருளின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியசுக்கு மேல்
அதிகரிப்பதில்லை. இதனால் வெறும் காகிதத்தால் ஆனா பையில் நீரை
இட்டு அதைச் சூடு படுத்தி கொதிக்க வைக்க முடியும்

No comments:

Post a Comment