Wednesday, November 23, 2011

vinveliyil ulaa

உமிகிரான் எரிடானி / 40 எரிடானி

16 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உமிகிரான் எரிடானி என்றும் 40 எரிடானி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு விண்மீன் உள்ளது .இது ஒரு மும் மீன்களின் தொகுப்பாகும் .
இதில் உள்ள முதன்மை விண்மீன் 4 .6 தோற்ற ஒளிப்பொலி வெண்ணுடன் நமது
சூரியனைப் போல உள்ளது. 1 வினாடி கோண விளக்கத்துடன் காணப்படும் இதன்துனை விண்மீன் ஓர் இரட்டை விண்மீனாக உள்ளது .9 .7 மற்றும் 11 .2 தோற்ற ஒளிப் பொலி வெண் கொண்ட
அவை குறுஞ் சிவப்பு, குறு வெள்ளை விண்மீன்களாக உள்ளன. ,குறுஞ் சிவப்பு விண்மீன்
மிகவும் குளிர்ச்சியாகவும் ,சூரியனின் பருமனில் 5 ல் 1 பங்கு உள்ளதாகவும் இருக்கிறது.
குறு வெள்ளை விண்மீன் சூரியனி விட 50 மடங்கு சிறியது. ஆனால் அடர்த்தி 64000
மடங்கு சூரியனின் அடர்த்தியை விடக் கூடுதலானது .இவை இரண்டும் தற் சுழற்சியுடன்
ஒன்றையொன்று 250 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன .இந்த இரட்டை
விண்மீன் ,முதன்மை விண்மீனை மிக நீண்ட கால சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது.

பொதுவாக குறு வெள்ளை விண்மீன்கள் சிறிய அளவினதாகவும் ,ஓரளவு குளிர்ச்சியாகவும் ,
குறைந்த ஒளிர்திறனுடனும் காணப்படும். நிறைமிக்கதாக இருப்பதால் இதன் அடர்த்தி
அதிகமாக இருக்கும்.அணுக் கருவிற்கும் அதைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களுக்கும்
இடையே ஓரளவு இடைவெளி இருக்கிறது. ஈர்ப்பால் இறுக்கப்படும் போது இந்த
எலெக்ட்ரான் களின் எதிர்ப்பு வலுவாக இல்லாத போது முறிந்து தூசித் துகள் போல
நெருக்கப் படுகின்றன .அப்போது அணுக் கருவிற்கும் எலெக்ட்ரான்களுக்கும் இடையே
சிறிதும் இடைவெளி இருப்பதில்லை .அப்போது அதன் அடர்த்தி மிகவும் அதிகரித்துவிடுகிறது .
இதுவே குறு வெள்ளை விண்மீனின் நிலை என ஆராய்ந்து கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment