பனிச் சறுக்கு விளையாட்டிற்கு இன்று தடை
பனிப் பிரதேசங்களில் பனிப் பரப்பில் கீழே விழுந்து விடாமல் சறுக்கி விளையாடுவார்கள் .
இதற்காக கால்களில் தகடுகளை அணிந்து கொள்வார்கள் .இதனால் இயக்கச் சமநிலையைப்
பெறமுடிகிறது .பனிப் பரப்பு மிகவும் குளிர்ச்சியாக உள்ள நாட்களில் பனியில் சறுக்குவது
கடினமாக இருக்கும். அனுபவம் உள்ளவர்கள் கூட விபத்தில் சிக்கிக் கொள்வர் .இதனால்
குளிர் மிகுந்த நாட்களில் பனியில் சறுக்கு வதற்கு அனுமதிப்பதில்லை. குளிர் மிகுந்த
நாட்களில் பனியில் சறுக்குவது ஏன் கடுமையாக இருக்கிறது ?
ஒரு பரப்பின் நிலைம உராய்வுக் குணகம்(static friction coefficient).பரப்பு மிகவும் .
குளிர்ச்சியாக
இருக்கும் போது அதிகம் .நிலைம உராய்வின் பெருமமும் அதிகரிக்கிறது. அந் நிலையில்
பனியில் சறுக்குவது மிகவும் கடினமாகி விடுகிறது .
0 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் பனிக்கட்டியின் புறப்பரப்பில் ஒரு மெல்லிய நீர் படலம்
படர்ந்திருக்கும் .இது சறுக்கி விளையாடும் போது இரு பரப்புகளுக் கிடையே மசகாகச் செயல்பட்டு
உராய்வைப் பெரிதும் குறைக்கிறது .மேலும் அழுத்தத்தின் காரணமாக பனியின் உறைநிலை
அதிகரிக்கிறது . அதனால் குறைந்த அழுத்தத்தில் உறைந்த பனிக்கட்டி உருகுகிறது ,இதற்குக்
காரணம் பனிக் கட்டியில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளே .ஹைட்ரஜன் பிணைப்புகளை
வெப்பம் மட்டுமின்றி அழுத்தம் கொடுத்ததும் துண்டிக்கலாம் .
ஒரு பனிக்கட்டித் துண்டின் மீது இரு முனைகளிலும் எடை கட்டிய நூலை இட ,அது பனிக்கட்டியை அறுத்துக்
கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் அழுத்தம் காரணமாக பனி உருகுவதாகும் .பனி கட்டியின்
மீது நூல் எங்கு அழுத்தம் கொடுக்கின்றதோ அப்பகுதி உருகிப் போவதால் ,நூல் கீழே நழுவிச்
செல்கிறது. எனினும் செயல்பட்ட அழுத்தம் நீக்கம் பெற்றவுடன் நூலுக்கு மேலாக உருகிய நீர் மீண்டும்
பணியாக உறைந்து விடுகிறது
No comments:
Post a Comment