சமைக்க கூடுதல் நேரம் வேண்டுமா ?
ஒரே அளவு சமிக்க மலைப் பிரதேசங்களில் கூடுதல் நேரமாகின்றது ? இது ஏன் ?
மலைப் பிரதேசங்கள் கடல் மட்டத்திலிருந்து வெகு உயரங்களில் இருப்பதால்
அங்கே வளி அழுத்தம் சற்று குறைவாக இருக்கும். அதனால் நீர் குறைந்த
வெப்ப நிலையிலேயேகொதிக்கும் . 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்
ஒரு பொருளைச் சமைக்க ஆகும் நேரத்தை விட 80 டிகிரி செல்சியஸ் வெப்ப்
நிலையில் அதே அளவு பொருளைச் சமைக்க ஆகும் நேரம் அதிகமாக இருக்கும்.
இதனால் மலைப் பிரதேசங்களில் சமைப்பதற்கு கூடுதல் நேரமாகிறது. .
அண்டார்டிகாவும் அர்க்டிக்கும்
அண்டார்டிகாவும் ஆர்க்டிக்கும் பூமியின் தெற்கு ,வடக்கு முனைகளில் உள்ளன .இதில்
அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த பகுதி ஆர்க்டிக்கில் பனி படர்ந்த பகுதியை விட
8 மடங்கு அதிகமாய் உள்ளது. வட, தென் முனைகளில் காணப்படும் இந்த வேறுபாட்டிற்கு
யாது காரணம் ?
அண்டார்டிக்கா ஒரு கண்டமாகும் . அது ஒரு நிலப்பகுதி . அது வெப்பத்தைத் தக்க வைத்துக்
கொள்வதில் மந்தமானது .பெற்ற வெப்ப ஆற்றலை உடனே கதிர் வீச்சாக வெளியே
உமிழ்ந்து விடுகிறது . இதனால் கடுங் குளிர்ச்சியான பகுதி பனி படர்ந்த பகுதியில் உட்புறம்
தள்ளி இருக்கிறது. ஆனால் ஆர்க்டிக் பனி கடலில் மிதக்கும் பனி மலை யாகும் .நீரின்
வெப்ப ஏற்புத் திறன் மிகவும் அதிகம் .பெற்ற வெப்பத்தை மெதுவாகவே இழக்கிறது.. கோடையில்
சேமித்த வெப்பம் குளிர் காலத்திலும் பாதிப்பதால் ஆர்க்டிக் பனி சிறிய எல்லைக்குள்
அடங்கி விடுகிறது .
No comments:
Post a Comment