ஹோரோலோஜியம்( horologium )
தென் பகுதியில் காணப்படும் இது ஒரு சிறிய ,மங்கலான விண்மீன் கூட்டமாகும் .லத்தீன் மொழியில்
கடிகார ஊசல் என்று இதற்குப் பொருள் .18 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வானவியலாரான அபே நிக்கோலஸ் லூயிஸ் டி பொகாலே என்பார் ,ஊசல் கடிகாரத்தைக் கண்டுபிடித்த
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்பாரைக் கௌரவிக்கும் விதமாக இதற்கு ஹோரோலோஜியம்
ஆசிலிடோரியம் என்று பெயரிட்டார் .இது காலப் போக்கில் சுருக்கி ஹோரோலோஜியம் ஆனது.
இது எரிடானஸ் வட்டாரத்திலுள்ள பிரகாசமான் ஆர்செர்னர் விண்மீனுக்கும் ,கரினா வட்டாரத்திலுள்ள பிரகாசமான கனோபஸ் விண்மீனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இது ஒரு ஊசலாடும் குண்டுபோலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது .இதில் பிரகாசமிக்க
ஆல்பா கோரோலோஜி ஊசலின் அலைவு தானத்தில் உள்ள நிறைமிக்க குண்டு போல
அமைந்துள்ளது. மொத்தம் 20 விண்மீன்கள் இவ்வட்டாரத்தில் அமைந்திருக்கலாம் என
அறிந்துள்ளனர் .இதிலுள்ள R ஹோரோலோஜி சீடெஸ் வட்டாரத்திலுள்ள செம்பூதபோன்ற
மீரா விண்மீன் போல ஒரு பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாக உள்ளது .இதன் ஒளி பொலி வெண் பெரும நிலையில் 5
லிருந்து, சிறும நிலையில் 14 வரை ,சுமார் 13 மாத கால நெடுக்கையில் மாற்றத்திற்கு
உள்ளாகிறது .
ஒளிப்பொலிவெண்ணில் மிக அதிக வேறுபாட்டுடன் கூடிய மாறொளிர் விண்மீன் இதுவே ஆகும் .
AM 1 என்று குறிப்பிடப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் இப்பகுதியில் உள்ளது. .இக் கூட்டமே ,பால் வெளி அண்டத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் கூட்டமாகும்.இது
398000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment