Saturday, November 19, 2011

vinveliyil ulaa



ஆசெர்னர் (Achernar ) (இது ஆல்பா எரி அல்லது ஆல்பா எரிடானி என்றழைக்கப்படும் )


ஆசெர்னர் மிக விரைவாகத் தற்சுழலும் ஒரு விண்மீன். இதன் தற்சுழற்சி வேகம் குறைந்தது
225 கி.மீ/வி என மதிப்பிட்டுள்ளனர். 2003 ல் இந்த விண்மீனை ,கட்டமைக்கப் பட்ட மிகப் பெரிய
வானத் தொலை நோக்கியால் பார்த்த போது இந்த விண்மீன் அளவுக்கு அதிகமாகத் தட்டையாக இருப்பது அறியப்பட்டது. நடுவரைக் கோட்டில் ஆரம், துருவ ஆரத்தை விட 50 சதவீதம்
அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது .
ஆல்பா எரிடானி இரவில் வானத்தில் காணப்படும் விண்மீன்களுள் 9 வது பிரகாசமான
வின்மீனாகும்






இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் எப்சிலான் எரிடானி என்றொரு விண்மீன் உள்ளது .
வெறும் கண்களுக்குப் புலப்படக் கூடிய இந்த விண்மீன் ,மிக அருகாமையில் இருப்பவற்றுள்
மூன்றாவதாக உள்ளது. இது சூரியனை விடச் சிறிய அளவினதாகவும் ,குளிர்ச்சியானதாகவும்
குறைந்த பிரகாசமுள்ளதாகவும் இருந்தாலும் சற்றேறக் குறைய சூரியனைப் போன்றது எனலாம் .
10 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 0 .88 மடங்கும்
நிறை 0 .85 மடங்கும் ஒளிர் திறன் 0 .34 மடங்கும் உள்ளது. தோற்ற ஒளிப்பொலிவெண்
3 .72 ஆக உள்ளது .சூரியனைப் போல மெதுவாகச் தற்சுழல்கிறது.
1998 ல் குளிர்ந்த வெப்பநிலையில் ஒரு தூசிப் படலம் தட்டு வடிவில் எப்சிலான் எரிடானியைச்
சுற்றி இருப்பதைக் கண்டறிந்தார்கள். சூரியக் குடும்பத்தில் காணப்படும் கெய்பர் பெல்ட் (Kuiper belt போல, ஏறக்குறைய சூரியனிலிருந்து புளூட்டோவின் சராசரித் தொலைவைப் போல இருமடங்கு
தொலைவு வரை விரவியுள்ளது .தூசியின் செறிவு 35 முதல் 75 வானியல் அலகுத் தொலைவு வரை
உள்ள வளையத்தில் காணப்படுகின்றது . 60 வானியல் அலகுத் தொலைவில் செறிவின் பெருமம்
அமைந்துள்ளது .இத் தூசிப் படலத்தின் பெரும நிறையை ௦.4 சூரிய நிறையாக மதிப்பிட்டுள்ளனர் .


2000 ல் வானவியலார் இந்த விண்மீனுக்கு நமது வியாழன் கோள் போன்று ஒரு கோள் ,
1 .2 மடங்கு வியாழனின் நிறையுடன் ,மிகவும் நீட்சியுற்ற ஒரு நீள் வட்டப் பாதையில்
3 .3 வானியல் அலகுத் தொலைவு சராசரி ஆரத்துடன் 6 .8 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன்
இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர் .

பூமிக்கு வெளியே உயர் உயிரினம் இருக்கக் கூடிய வாய்ப்பு பற்றி இன்றைக்கு பன்னாட்டு
வானவியலார் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியில் இது முக்கியமாகக் கருதப்படுகிறது .
எப்சிலான் எரிடானசின் இளநிலை ,உயிரினம் இன்னும் தோன்றி இருக்க வாய்ப்பில்லை
என்று கூறினாலும் எதிர்காலத்தில் உயிரினம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்று
மறுக்க முடியாது. இந்த ஆய்வில் டௌ சீடிக்கு அடுத்ததாக இந்த விண்மீன் அனைவரின்
கவனத்தில் இருந்து வருகிறது. இது டௌ சீடியை விடவும் சற்று குறுகிய தொலைவில்
உள்ளது என்பதும் அதற்கு ஒரு காரணம்

No comments:

Post a Comment