Thursday, November 17, 2011

vinveliyil ulaa



(எரிடானஸ் இத்தாலி நாட்டில் ஓடும் ஒரு ஆறு . இதை அங்கு போ (PO ) என அழைக்கின்றார்கள் .
இதற்கு ஆறுகளின் அரசன் என்று பொருள் .)

எரிட்டாநெஸ்(Eridanus) என்ற ஆறு ,பாத்தோன் (Phaethon ) என்பவனின் கதையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது .
இவன் சூரியக் கடவுளான ஹிலியோவின் மகனாவான் .ஒருசமயம் தன்னுடைய பிறந்த நாளன்று ,தன் தந்தையை அணுகி தான் சூரியனின் மகன்
என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது என்று கேட்டான் .அதற்கு
அவன் தந்தை நீ விரும்பியதைக் கேள் நான் தருகிறேன் என்று கூற , பாத்தோனும்
தன் தந்தையின் தேரை ஓட்டிப் பார்க்க விரும்பிக் கேட்டான் .அப்போது அவன் தந்தை
இந்தத் தேரை ஓட்டிச் செலுத்துவது கடினம் ,அனுபவம் இல்லாத இளைங்கர்களுக்கு
இது மரணத்தைத் தரக் கூடியது என்று சொல்ல, பார்தோனும் வற்புறுத்திக் கேட்க
மறுக்கமுடியாமல் அப்பல்லோவும் அனுமதித்துவிட்டார் .
தேரைச் செலுத்தும்போது குதிரைகளை கட்டுப்படுத்த முடியாது போகவே
ஆற்றுக்குள் விழுந்துவிடுகிறான் .



தன் தந்தையின் தேரை ஓட்டிச் செல்லும் ஒரு சோகமான
முயற்சியில் அவன் ஆற்றுக்குள் விழுந்து விடுகிறான் .அதனால் அந்த ஆறு புராணக் கதையில் சிறப்புற்றது .அந்த
ஆற்றின் பெயரிலேயே இந்த வட்டார விண்மீன் கூட்டம் அழைக்கப்படுகிறது .இதிலுள்ள அடுத்தடுத்த விண்மீன்களை
இணைத்தால் ,அது வளைந்து வளைந்து ஓடும் ஒரு ஆறு போலத் தோன்றும். விண்ணில் 60 டிகிரி வடக்கிலிருந்து
தெற்கு வரை நெடிய தொலைவு விரிந்து இருக்குமாறு ஒரு சரிவைப் பெற்றிருக்கிறது .இது போல வேறு எந்த வட்டார
விண்மீன் கூட்டங்களும் சரிவைப் பெற்றிருக்கவில்லை .

இதிலுள்ள மிகப் பிரகாசமான விண்மீன் ஆசெர்னர் (Achernar ) என அழைக்கப்படும் ஆல்பா எரிடானி ஆகும். இது இளம்
நீல நிறமான ,தோற்றப் பொலிவெண் 0 .5 உடைய மிகப் பிரகாசமான விண்வெளியில் 9 வது பிரகாசமிக்க 144
ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள விண்மீனாகும்.ஆசெர்நர் என்றால் அரேபிய மொழியில் ஆற்றின் கழிமுகம் .
இதன் பிரகாசம் சூரியனைப் போல 3000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர் .இது நிறமாலை வகையில் B3e ஆக
உள்ளது. அதாவது நிறமாலையில் ஹைட்ரஜன் உமிழ்வு வரிகளைக் காணமுடிகிறது.

No comments:

Post a Comment