Tuesday, November 15, 2011

arika ariviyal

சுற்றுப் புறம் அதே வெப்ப நிலையில் இருக்க நீர் ஏன் ஆவியாகவேண்டும் ?

இரு பொருட்களுக்கிடையே வெப்ப நிலை வேறுபாடு இருக்கும்போது மட்டும் தான் வெப்பமானது
தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருளுக்கு பரிமாற்றப் படுகிறது.அப்படியென்றால் சுற்றுப்
புறத்தின் அதே வெப்ப நிலையில் ஒரு கண்ணாடித் தட்டில் எடுத்துக் கொண்ட நீர் எப்படி
ஆவியாகிறது?அது ஆவியாவதற்குத் தேவையான ஆற்றலை நீர் சுற்றுப் புறத்திலிருந்து
பெறவே முடியாது. ஏனெனில் சுற்றுப் புறமும் அதே வெப்ப நிலையில் உள்ளது.அப்படியென்றால்
நீர் எப்படி ஆவியாகிறது ?

எந்த ஒரு வெப்ப நிலையிலும் ஓர் நீர்மத்திலுள்ள அனைத்து மூலக்கூறுகளும் ஒரே வேகத்தில்
இயங்குவதில்லை.அவ வெப்பநிலையில் அவற்றின் சராசரி வேகம் மட்டுமே மாறாதிருக்கிறது .
எனவே அதில் சராசரி வேகத்தைவிட வேகம் மிகுந்த மூலக்கூறுகளும் ,வேகம் குறைந்த
மூலக்கூறுகளும் உள்ளன.ஆவியாக்கத்தின் போது முதலில் வேகம் மிகுந்த மூலக்கூறுகள்
நீர்மத்தை விட்டு வெளியேறுகின்றன.ஏனெனில் அவை நீர்மத்தின் ஒட்டு விசை (cohesion
force)க்கு எதிராகச் செயல்பட்டு விடுபடும் தன்மையைப் பெற்றுள்ளன.அவை வெளியேறிய பின்
எஞ்சிய மூலக்கூறுகளின் சராசரி வேகம் குறைகிறது.அதாவது அதன் வெப்ப நிலை
குறைகிறது. அந்த வெப்ப நிலையில் மிகு வேக மூலக்கூறுகள் வெளியேற மீண்டும் வெப்ப நிலை
குறைகிறது .அதனால் ஆவியாக்கம் தொடர்ந்து நிகழ்கிறது .

No comments:

Post a Comment