ஆற்றல் மறைந்த மாயம் ?
ஒரே மாதிரியான இரு கொள்கலன்கள் ,கட்டுப்பாட்டு வால்வுடன்
கூடிய ஒரு மில்லிய குழாய் மூலம் இணைக்கப்படுகின்றன .
தொடக்கத்தில் ஒரு கலனில் h உயரம் இருக்குமாறு நீரிட்டு
நிரப்பப்படுகிறது .வால்வைத் திறக்க ,நீர் ஒரு கலனிலிருந்து
மற்றொரு கலனுக்குப் பாய்ந்து செல்கின்றது .இந்தப் பாய்வு
இரு கலனிலும் நீர் மட்டம் h /2 உயரம் எட்டும் வரை நிகழ்கிறது .
தொடக்கத்தில் நீரின் ஈர்ப்பு நிலையாற்றல் (gravitational potential
energy ) W (h/2), நீரின் எடை மற்றும் ஈர்ப்பு மையத்தின் உயரம் இவற்றின்
பெருக்கல் பலனாகும் . இறுதி நிலையில் நீரின் ஈர்ப்பு நிலை யாற்றல்
2 (W /2)(h/4) = W(h/4). இது தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவேயாகும். மீதிப் பாதியளவு ஈர்ப்பு நிலையாற்றல்
எப்படி மாயமாய்ப் போனது ?
நுண் புழைக் குழாய் வழிப் பாயும் நீர் ,பல அடுக்குகளாக வகுக்கப்பட்டு பாய்கிறது .
இதில் மையத்தில் செல்லும் நீர் விரைவாகவும் ,குழாயின் சுவரை ஓட்டிச்
செல்லும் நீர் குறைந்த வேகத்துடனும் பாயும்.இந்த வேக வேறுபாடு
இயங்கும் இரு அடுக்குகளுக் கிடையே உராய்வை ஏற்படுத்துகிறது.
இந்த உராய்வை எதிர்த்துச் செல்வதால்,தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவு வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. இந்த அக உராய்வும்
குழாயின் சுவரோடு ஏற்படுத்தும் உராய்வும் இல்லாதிருந்தால் ,நீரானது
இரு கொள்கலன்களுக்குமிடையே தொடர்ந்து மாறிமாறிப் பாய்ந்து
அலைவியக்கதைக் கொண்டிருக்கும் .
No comments:
Post a Comment