Friday, September 21, 2012


Micro aspects of developing inherent potentials செலவாணிக்கு ஒவ்வொரு நாடும் காகிதத்தில் அச்சடித்த நோட்டுக்களை வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் டாலர் ,ஐரோப்பாவில் யூரோ, ஜப்பானில் யென்,அரேபியாவின் தினார், இந்தியாவில் ரூபாய் .காகிதத்தின் உண்மை மதிப்பு என்ன என்று பார்த்தல் அது 50 பைசாவிற்கும் குறைவுதான். ஆனால் பணப் பரிவர்த்தணையில் அதன் மதிப்பு அதன் மீது அச்சடிக்கப்பட்டுள்ள எண்ணைப் பொறுத்திருக்கிறது. இந்த எண் மதிப்பு உயர உயர அந்தக் காகிதத்தின் மதிப்பும் உயருகிறது.அது போலத்தான் மனிதர்களும். ஒவ்வொரு மனிதனின் மதிப்பும் அவர்கள் பெற்றுள்ள தனித் திறமைகளின் அளவைப் பொறுத்தது. திறமை என்பது சமுதாயத்திற்கு ஒருவன் எவ்வளவு பயன் தருவான் என்பதை அளவிட்டு முன் தெரிவிக்கக் கூடிய ஒரு கூறு. பலர் அறிவே திறமை என்று தவறாக எண்ணிக் கொள்கின்றார்கள். அறிவு என்பது பதுக்கி வைக்கப் பட்ட பணம் போன்றது. அதனால் யாருக்கும் பயனில்லை.அதைப் பிறருக்குப் பயன்படுமாறு செய்வதின் மூலம் தனக்கும் பயன்படுத்திக் கொள்வதே திறமை.ஒவ்வொருவரும் தங்கள் நெற்றியில்இரகசியமாக அவர்களுடைய மதிப்பை ஒரு எண்ணால் குறிப்பிடவேண்டும் என்றும் ஒருவருடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய மதிப்பை எக்ஸ்ரே கண்களால் பார்க்க முடியும் என்ற நிலையும் உருவானால் உங்கள் நெற்றியில் என்ன மதிப்பு எழுதப் படவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். அது 50 பைசா முதல் 1000 ரூபாய்க்கும் அப்பாற்பட்டு 5000, 10,000, 100,000 எனவும் இருக்கலாம்; அதற்கும் மேற்பட்டு இருக்கலாம்.நீங்கள் யார் என்பதைக் காட்ட இவற்றுள் எந்த எண் உங்கள் நெற்றியில் எழுதப்பட விரும்புவீர்கள் ? நிச்சியமாக யாரும் குறைந்த மதிப்பு இருப்பதை விரும்ப மாட்டார்கள் .நீங்கள் ஒரு காகிதத்தில் ஆயிரம் ரூபாய் என்று எழுதிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுமாறு இருக்கவேண்டும். அது போல நெற்றியில் நீங்கள் எழுதும் எண் எல்லோருக்கும் பயன்தரக்கூடிய உங்கள் திறமையைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.திறமை இல்லாமல் நீங்களாகவே உங்களை மிகையாக மதிப்பிட்டுக் கொள்ளுதல் என்பது வெறும் காகிதத்தில் நீங்களாக ஆயிரம் ரூபாய் என்று எழுதுவதைப் போன்றது. அதைக் கொண்டு பண்டமாற்றம் ஏதும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும். நாம் ஏன் மதிப்புக் குறைந்தவர்களாக இருக்க வேண்டும். .உங்களுடைய உண்மையான சுய மதிப்பே உங்களுக்கு உயர்வு தரும் மதிப்பு .அதை சரியாக உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லோரையும் விட மதிப்பு மிக்கவர்களாக விளங்குவோம்

No comments:

Post a Comment